3 ஹீரோ.. தெலங்கானா காங்கிரஸ் வெற்றிக்கு இவங்க தான் காரணம்! அட தமிழக எம்பி இருக்காரே! செய்தது என்ன
ஹைதராபாத்: இன்று வெளியான ரிசல்ட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. ஆனால் தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. காங்கிரஸின் இந்த வெற்றிக்கு பின்னணியில் உள்ள 3 முக்கிய நபர்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் என்பது நடந்தது. மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களுக்கு தனித்தனியே ஓட்டுப்பதிவுகள் நடந்தது. இதில் மிசோராம் தவிர பிற 4 மாநிலங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

இதில் மத்திய பிரதேசத்தில் இமாலய வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது. இதன்மூலம் அங்கு காங்கிரஸ் கட்சி ஏமாற்றமடைந்துள்ளது. இதுதவிர ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்த நிலையில் தற்போது இருமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இப்படி வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை வீசியுள்ள நிலையில் தென்மாநிலமான தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு புதிதாக உருவான தெலங்கானாவில் முதல் 2 சட்டசபை தேர்தல்களில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அவர் முதல்வாக நீடித்து வந்தார். இந்நிலையில் தான் 3வது சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது.
இதில் 71 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் 119 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 60 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் தோற்ற நிலையில் தெலுங்கானாவில் அந்த கட்சி வெற்றி பெற்றது எப்படி? என பலருக்கும் சந்தேகம் எழுகிறது. அதாவது தெலுங்கானா தேர்தல் வெற்றியின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 3 ஹீரோக்கள் உள்ளனர். அது யார் என்றால் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல்.
அதாவது புதிய மாநிலமாக ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புகள் சிதைந்தன. அதோடு தெலுங்கானாவை புதிய மாநிலமாக உருவாக்க போராட்டம், உண்ணாவிரதம் நடத்திய நிலையில் சந்திரசேகர் ராவ் முதல் 2 தேர்தல்களில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திறமையான தலைவர் இல்லாத நிலை இருந்தது.
இதற்கிடையே தான் கடந்த 2017 ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரேவந்த் ரெட்டி காங்கிரஸில் இணைந்தார். இவரது தலைமை பண்பை அறிந்த காங்கிரஸ் கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கானா மாநில தலைவராக நியமனம் செய்தது. இதையடுத்து தான் ரேவந்த் ரெட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்தார். அதோடு தொடக்கத்தில் கட்சியில் அவருக்கு எதிராக சிலர் செயல்பட்ட நிலையில் சிலர் விலகினர். இருப்பினும் மனம் தளராமல் அவர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தார். அதோடு ஆண்ட சந்திரசேகரராவ் மற்றும் அவரது கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர் எடுத்து கூறி போராட்டங்களை நடத்தினார். இவர் முதல் ஹீரோவாக இருக்கிறார்.
அடுத்ததாக 2வது ஹீரோ மாணிக்கம் தாகூர். தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக கடந்த ஆண்டு வரை நீடித்தார். இந்த வேளையில் அவர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து இணக்கமாக செயல்பட்டார். இந்த வேளையில் வேறு கட்சியில் இருந்து வந்தவர் என்பதால் ரேவந்த் ரெட்டியை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓங்கி ஒலித்தது. ஆனால் மாணிக்கம் தாகூர் அதனை செய்யவே இல்லை. இறுதியாக கடந்த ஆண்டு அவர் தெலங்கானா மேலிட பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்து கோவா பொறுப்பாளராக மாறினார். ரேவந்த் ரெட்டியை மாற்றாமல் இருந்ததால் தான் இன்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மாணிக்கம் தாகூர் 2வது ஹீரோவாக உள்ளார்.
இதில் 3வது ஹீரோ சுனில் கணுகோல். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர். இவர் தான் காங்கிரஸ் கட்சியின் பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறார். தெலுங்கானா தேர்தலிலும் இவர் பல அறிவுரைகளை காங்கிரஸ் கட்சிக்கு வகுத்து கொடுத்து இருந்தார். அதன்படி காங்கிரஸ் கட்சியும் அதனை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இதனால் சுனில் கணுகோல் 3வது ஹீரோவாக உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications