பஞ்சாயத்து தலைவர் to முதல்வர்.. ABVP - காங்கிரஸ் வரை.. திகுதிகு வளர்ச்சி! யார் இந்த ரேவந்த் ரெட்டி?
ஹைதராபாத்: தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார். யார் இந்த ரேவந்த் ரெட்டி? அவரது அரசியல் பயணம் குறித்து பார்க்கலாம்.
4 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இவற்றில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வென்றது. தெலுங்கானாவில் உள்ள மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சி அமைக்க 60 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கணித்தபடியே தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 64 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உடனேயே அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முதல் முறையாக காங்கிரஸ்: தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிதான் வெற்றி பெற்றது. கேசிஆர் தான் கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வரானார். இந்நிலையில் முதல் முறையாக ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்தார் கேசிஆர். தெலுங்கானாவின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார்.
காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை சாத்தியமாக்கி கொடுத்தவர் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி. தெலுங்கு தேசம் கட்சியில் பணியாற்றிய ரேவந்த் ரெட்டி கடந்த 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தலைமையின் நம்பிக்கையைப் பெற்று, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சாரதியாக வழிநடத்தினார்.

யார் இந்த ரேவந்த் ரெட்டி?: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் மகபூப்நகர் மாவட்டத்தின், கொண்டாரெட்டி பல்லி எனும் குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி. மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் துவங்கினார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரேவந்த் ரெட்டி, அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் இணைந்து செயல்பட்டார்.
2006ஆம் ஆண்டில் மிட்ஜல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ரேவந்த் ரெட்டி. பின்னர் அவரது அரசியல் வளர்ச்சி விஸ்வரூபம் கண்டது. 2007-ம் ஆண்டு, ஒருங்கிணைந்த ஆந்திராவில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் இருந்து சுயேச்சை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
2009-ல் கோடங்கல் சட்டப்பேரவை தொகுதியில், ரேவந்த் ரெட்டியை வேட்பாளராக போட்டியிட வைத்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் வேட்பாளர் குருநாத் ரெட்டியை தோற்கடித்து முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார். 5 முறை எம்.எல்.ஏவான காங்கிரஸ் கட்சியின் குருநாத் ரெட்டியை, ரேவந்த் ரெட்டி வீழ்த்தியது பரபரப்பாக பேசப்பட்டது.
தொகுதி பற்றி தெரியாமலே வென்றவர்: "கோடங்கல் தொகுதி எல்லை எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்றே தெரியாமல் தான் பிரச்சாரங்களை மேற்கொண்டேன். முதல்முறையாக அப்போதுதான் கோடங்கல் சட்டசபை தொகுதிக்கு சென்றேன். 14 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்து 7,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்." என இந்த வெற்றி குறித்துப் பேசியுள்ளார் ரேவந்த் ரெட்டி.
அதன்பின்னர், 2014-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். 2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் பிரிந்த நிலையில், தெலுங்கானா மாநில தெலுங்கு தேச கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் ரேவந்த் ரெட்டி.
ரேவந்த் ரெட்டி கைது: 2015ஆம் ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவை மேல்சபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க நியமன எம்எல்ஏ எல்விஸ் ஸ்டீபன்சனுக்கு ரேவந்த் ரெட்டி லஞ்சம் கொடுத்ததாக ஒரு 'ஸ்டிங்-ஆபரேஷன்' வீடியோ வெளியிடப்பட்டது.
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து 2015 மே மாத இறுதியில் ரேவந்த் ரெட்டியை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது. அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தெலுங்கானா உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ரேவந்த் ரெட்டி ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்: பின்னர், 2017-ல் தெலுங்கு தேசம் கட்சியை விட்டு விலகி, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2018-ல் காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவரானார். 2018-ல் தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோடங்கல் தொகுதியில் நின்று தோல்வியைச் சந்தித்தார்.
2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர், தெலங்கானா மாநிலம், மல்காஜ்கிரி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். தெலுங்கானா மாநிலத்தில், ரேவந்த் ரெட்டிக்கென மக்கள் மத்தியில் ஒரு ஆதரவு அலை உருவானது. இதைத் தொடர்ந்து இவரின் வளர்ச்சியை கண்டு, 2021ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது.
மிகப்பெரிய பொறுப்பு: கோஷ்டி மோதல்களுக்கு பெயர் போன தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பொறுப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி, மூத்த தலைவர்களைச் சமாளித்து, கட்சியை திறம்பட நடத்திச் சென்றார். இதன் மூலம், மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற்றார். ராகுல் காந்திக்கும் நெருக்கமானார். கேசிஆர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக எதிர்க்கும் தலைவராக ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் தொண்டர்களின் அபிமானத்தைப் பெற்றார்.
சாரதியாக நின்று: இதைத்தொடர்ந்து, நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சாரதியாக நின்று வழிநடத்தினார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில், கோடங்கல் மற்றும் காமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் ரேவந்த் ரெட்டி. கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையிலும், காமாரெட்டியில் கேசிஆருக்கு டஃப் ஃபைட் கொடுத்த ரேவந்த் ரெட்டி பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டியிடம் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், இன்று தெலங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ரேவந்த் ரெட்டி. இவருக்கு கீதா என்கிற மனைவியும் நைமிஷா எனும் மகளும் உள்ளனர். ரேவந்த் ரெட்டியின் மனைவி கீதா, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஜெய்பால் ரெட்டியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications