"தொக்கா" சிக்கிட்டாரு.. கோயில் பூசாரிக்கு வந்த கள்ளக்காதல்.. தனக்கு தானே "ஆப்பு".. பாவம் அந்த பொண்ணு
ஹைதராபாத்: காணாமல் போன இளம்பெண் விவகாரத்தில், உண்மை தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா.. இவருக்கு 36 வயதாகிறது.. இவர் வசிக்கும் பகுதியிலேயே பங்காரு மைசம்மா என்ற கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்... இவருக்கு கல்யாணமாகிவிட்டது.. ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நற்குடா கிராமத்தை சேர்ந்த அப்சரா என்ற பெண்ணுடன் பூசாரிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது..
பூசாரி: அந்த கோயிலுக்கு அப்சரா அடிக்கடி வந்து போவாராம்.. இதனால், ஏற்பட்ட நட்பு கடைசியில் கள்ளக்காதலாக உருவெடுத்தது.. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.
இதனால் அப்சரா கர்ப்பமடைந்ததாக தெரிகிறது.. இந்த விஷயத்தை பூசாரியிடம் சொல்லவும், அவர் பதறிப்போய் உள்ளார்.. இதனால் கர்ப்பத்தை கலைக்கும்படி, அப்சராவிடம் சொல்லி உள்ளார்.. அப்சராவும் வேறு வழியின்றி கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனால், அதற்கு பிறகுதான், பூசாரி தன்னை ஏமாற்றுகிறார் என்பதை அப்சரா உணர்ந்துள்ளார்..
கல்யாண பேச்சு: எனவே, கல்யாண பேச்சையும் எடுத்துள்ளார்.. திருமண பேச்சை பூசாரி தட்டிக்கழித்து வந்த நிலையில், அப்சராவின் திருமண தொல்லையும் அதிகரித்து வந்துள்ளது.. ஒருநாள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர்... அப்போது, அப்சரா மறுபடியும் கல்யாண பேச்சை எடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பூசாரி, அப்சராவை கடுமையாக தாக்கியதுடன் கொலையும் செய்துவிட்டார்.. இதற்குபிறகு, சடலத்தை சரூர் நகர் எடுத்து வந்து, அங்குள்ள செப்டிக் டேங்க்கில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.. இதற்கு நடுவில், மகளை காணவில்லை என்று அப்சராவின் பெற்றோர் போலீசில் புகார் தந்துள்ளார்..
கொலை: அப்போது நடந்த விசாரணையில்தான், பூசாரி சிக்கிவிட்டார்.. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில், கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். சடலத்தை மீட்ட போலீசார், காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து, பூசாரியையும் போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

மகளை காணவில்லை என்று பெற்றோர் ஊரெல்லாம் தேடியபோது, பூசாரியும் இவர்களுடன் சேர்ந்து தேடினாராம்.. போலீசுக்கு போய் புகாரை கொடுக்கும்போதும், பூசாரி அவர்களுடனேயே சென்று புகார் தந்தாராம்..
அப்சரா: சம்பவத்தன்று, பேங்கிற்கு செல்வதாக சொல்லிவிட்டு, பூசாரியை சந்திக்க சென்றுள்ளார் அப்சரா.. அப்போது நடந்த தகராறில், பாறாங்கல்லை தூக்கி போட்டு அப்சராவை கொன்றாராம் பூசாரி.. போலீசார் விசாரணை நடத்தியபோது, சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்சராவுக்கு போன் கால்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.. அப்போதுதான் பூசாரி மீது சந்தேகம் திரும்பி உள்ளது.. வலிய சென்று புகாரையும் தந்து, அதில் வசமாக தானே சிக்கியும் கொண்டுவிட்டார் பூசாரி..!!
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications