"செல்லம்" ஏமாத்துறியா.. கோயில் பூசாரியின் கள்ளக்காதல்.. கொடுமை.. கூகுளில் "அந்த" விஷயத்தை தேடினாராமே

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: காணாமல் போன இளம்பெண் விவகாரத்தில், பூசாரி வசமாக சிக்கி உள்ள நிலையில், அவர் தந்த வாக்குமூலம் தெலுங்கானாவை அதிர வைத்து வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா.. இவருக்கு 36 வயதாகிறது.. இவர் வசிக்கும் பகுதியிலேயே பங்காரு மைசம்மா என்ற கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்... இவருக்கு கல்யாணமாகிவிட்டது.. ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நற்குடா கிராமத்தை சேர்ந்த அப்சரா என்ற பெண்ணுடன் பூசாரிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது..

Who is this Telangana Apsara and and how did police arrest the temple priest

தனிமை: அந்த கோயிலுக்கு அப்சரா அடிக்கடி வந்து போவாராம்.. இதனால், ஏற்பட்ட நட்பு கடைசியில் கள்ளக்காதலாக உருவெடுத்தது.. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.

இதனால் அப்சரா கர்ப்பமடைந்ததாக தெரிகிறது.. இந்த விஷயத்தை பூசாரியிடம் சொல்லவும், அவர் பதறிப்போய் உள்ளார்.. இதனால் கர்ப்பத்தை கலைக்கும்படி, அப்சராவிடம் சொல்லி உள்ளார்.. அப்சராவும் வேறு வழியின்றி கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனால், அதற்கு பிறகுதான், பூசாரி தன்னை ஏமாற்றுகிறார் என்பதை அப்சரா உணர்ந்துள்ளார்..

கல்யாண பேச்சு: எனவே, கல்யாண பேச்சையும் எடுத்துள்ளார்.. திருமண பேச்சை பூசாரி தட்டிக்கழித்து வந்த நிலையில், அப்சராவின் திருமண தொல்லையும் அதிகரித்து வந்துள்ளது.. ஒருநாள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர்... அப்போது, அப்சரா மறுபடியும் கல்யாண பேச்சை எடுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பூசாரி, அப்சராவை கடுமையாக தாக்கியதுடன் கொலையும் செய்துவிட்டார்.. இதற்குபிறகு, சடலத்தை சரூர் நகர் எடுத்து வந்து, அங்குள்ள செப்டிக் டேங்க்கில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.. இதற்கு நடுவில், மகளை காணவில்லை என்று அப்சராவின் பெற்றோர் போலீசில் புகார் தந்துள்ளார்..

கொலை: அப்போது நடந்த விசாரணையில்தான், பூசாரி சிக்கிவிட்டார்.. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில், கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். சடலத்தை மீட்ட போலீசார், காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து, பூசாரியையும் போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. மகளை காணவில்லை என்று பெற்றோர் ஊரெல்லாம் தேடியபோது, பூசாரியும் இவர்களுடன் சேர்ந்து தேடினாராம்.. அதுமட்டுமல்ல, அப்சராவை காணவில்லை என்று போலீசில் புகார் தந்ததே பூசாரிதானாம்..

இப்போது போலீசில் வாக்குமூலம் ஒன்றை தந்துள்ளார் பூசாரி.. அந்த வாக்குமூலத்தை கேட்டுத்தான் தெலுங்கானாவே ஆடிப்போய் கிடக்கிறது.. 2 குழந்தைகளுக்கு தகப்பனான பூசாரி, கள்ளக்காதலியுடன் தொடர்ந்து பழகியே வந்திருக்கிறார்.. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய (ஆர்ஜிஐஏ) போலீஸ் ஸ்டேஷனில் அப்சராவை காணவில்லை என்று, ஜூன் 3-ம் தேதி பூசாரியே புகாரை தந்துள்ளார்.. அந்த புகாரில், அப்சராவை உறவினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தோழி வீட்டுக்கு செல்லவிருந்த அப்சராவை, ஷம்ஷாபாத்தில் காரில் இறக்கிவிட்டுச் சென்றபிறகு காணவில்லை என்றும், தோழிகளுடன் பத்ராச்சலத்திற்கு செல்லவிருந்த அப்சரா, ஜுன் 4-ம் தேதி முதல் போன் அழைப்புகளை எடுப்பதை நிறுத்தி விட்டதாகவும், பிறகு அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.. இதுவும் போலீஸ் விசாரணையில் பொய் என்று தெரியவந்தது..

இதற்கு பிறகுதான், பூசாரி தொடர்பான சிசிடிவி காட்சிகளையும், அவரது செல்போன் அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்... செல்போனும், சிசிடிவியும்தான் பூசாரியை காட்டிக்கொடுத்துள்ளது. கடந்த ஜூன் 3-ம் தேதி காரில் அப்சராவை நகரின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத் மண்டலத்தில் உள்ள சுல்தான் பள்ளிக்கு பூசாரி அழைத்து சென்றாராம்..

கூகுள்: கல்யாண பேச்சை அப்சரா எடுத்ததுமே, ஒரு பாறாங்கல்லை எடுத்துவந்து தாக்கி அடித்து கொன்றதாக கூறியுள்ளார். பெரிய பை ஒன்றில் சடலத்தை வைத்து கட்டி, அந்த சடலத்தை காரிலேயே வைத்து, சரூர் நகருக்கு கொண்டு வந்ததாகவும், கோயிலுக்கு பின்புறம் உள்ள செப்டிக் டேங்கிற்குள் வீசிவிட்டு சென்றதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார்..

அதுமட்டுமல்ல, அப்சராவை கொலை செய்வதற்கு முன்பு கொலை செய்வது எப்படி? என்று கூகுளில் பலமுறை தேடினாராம்.. இதையும் வாக்குமூலத்திலேயே பூசாரி சொல்லி உள்ளார்.. வலிய சென்று புகாரையும் தந்து, அதில் வசமாக தானே சிக்கியும் கொண்டுவிட்டார் பூசாரி..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+