ட்விஸ்ட்! இங்கே ரஜினி.. ஆந்திராவில் "ஜூனியர் என்டிஆர்".. இன்றே கால் வைக்கும் அமித் ஷா! பரபர டின்னர்
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சந்திப்பு நடத்த உள்ளார்.
Recommended Video
ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் அளவும் கட்சி தெலுங்கு தேசம் கட்சி ஆகும். இதன் நிறுவனர் என்டி ராமா ராவ். இந்த கட்சியை தொடங்கி 10 மாதங்களில் முதல்வர் ஆனவர் என்டி ராமா ராவ்.
கடந்த முறை இதே தெலுங்கு தேசம் கட்சிதான் ஆந்திராவில் ஆட்சி புரிந்து வந்தது. சந்திர பாபு நாயுடு இதன் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஜெகன் மோகனின் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்து பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.

என்டி ராமா ராவ்
இந்த நிலையில் தற்போது என்டி ராமா ராவின் பேரன் ஜூனியர் என்டிஆர் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக என்டிஆர் உள்ளார். அதே சமயம் கடந்த 2009ல் இவர் தெலுங்கு தேசம் கட்சிக்காக பிரச்சாரமும் செய்தார். இருந்தாலும் அரசியலில் ஜூனியர் என்டிஆர் அவ்வளவு ஆர்வமாக இல்லை. சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் அடுத்த வெற்றிமாறன் படம் ஒன்றில் நடிப்பதற்காக பேசி வருகிறார்.

திருப்பம்
இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று ஜூனியர் என்டிஆர் சந்திக்க உள்ளார். இன்று அமித் ஷாவுடன் இவர் டின்னர் சாப்பிட உள்ளார். தெலுங்கானாவில் உள்ள முனுகுடுவில் நடக்க உள்ள சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக இவர் வர உள்ளார். இந்த பிரச்சாரம் முடிந்து இரவு ஹைதராபாத்தில் தாங்கும் அவர் ஜூனியர் என்டிஆரை சந்திக்க உள்ளார். இவரின் மறைந்த நந்தமூரி ஹரிகிருஷ்ணா முன்னாள் தெலுங்கு தேசம் எம்பி.

பால கிருஷ்ணா
இவரின் சகோதரர் பாலா கிருஷ்ணா இப்போது தெலுங்கு தேசம் எம்எல்ஏவாகவும், அங்கு பிரபல நடிகராகவும் இருக்கிறார். இவர் சமீபத்தில் எடுத்த ஆகண்டா படம் பான் இந்தியா அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ஜூனியர் என்டிஆரை அமித் ஷா சந்திக்க உள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராமசந்திர ராவ் இந்த சந்திப்பில் உடன் இருப்பார். இவர்களின் சந்திப்பிற்கு பின் என்ன காரணம் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாமனார்
முன்பு தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில்தான் இருந்தது. அதன்பின் கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறியது. 2019 லோக்சபா தேர்தலில் சந்திர பாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் பாஜகவை கடுமையாக எதிர்த்தது. தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக அணியை உருவாக்க சந்திர பாபு நாயுடு முயன்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக ஜூனியர் என்டிஆரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

மோதல்
சந்திர பாபு நாயுடு தலைமையில் தற்போது தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. இந்த கட்சி பாஜகவுடன் கடுமையான மோதலில் உள்ளது. சந்திர பாபு நாயுடு என் டி ராமா ராவின் மருமகன். ஜூனியர் என்டிஆர் என்டி ராமா ராவின் பேரன். இதனால் பேரனை வைத்து மருமகனை கவிழ்க்க அமித் ஷா திட்டமிடுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ரஜினி மீண்டும் "அரசியல் பேச" தொடங்கி உள்ளது போல ஆந்திராவில் என்டிஆரை பாஜக பயன்படுத்த முடிவு செய்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications