ரோஜா செய்த "காரியம்".. பறந்த ரிப்போர்ட்.. ஜஸ்ட் மிஸ்.. ஜெகனே டென்ஷனாயிட்டாரே.. என்னாச்சு..!
ரோஜாவின் பதவி பறிப்புக்கு என்ன காரணம் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது
ஹைதராபாத்: ரோஜாவுக்கு பதவி பறிக்கப்பட்டுள்ளது.. இதுதான் ஏன் என்ற குழப்பம் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது..!
Recommended Video
நேற்று ரோஜாவின் பதவி பறிப்பு என்று திடுதிப்பென்று ஒரு அறிவிப்பு வெளியானது.. பல்வேறுகட்ட முயற்சிகளுக்கு பிறகு, தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தலைவர் என்ற பதவி நடிகை ரோஜாவுக்கு தரப்பட்டது.
ஆனால், அந்த பதவியும் இப்போது பறிக்கப்பட்டதாகவும், அந்த பதவிக்கு மெட்டுகோவிந்த ரெட்டி என்பவர் ரோஜாவுக்கு பதிலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.

எம்எல்ஏ
இதற்கு காரணம், எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என்று முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்த காரணத்தால், ரோஜாவின் இந்த பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், இது மட்டுமே காரணம் இல்லை என்கிறார்கள்.. பதவியை பறித்ததால் ரோஜாவின் ஆதரவாளர்கள் டென்ஷன் ஆகி உள்ளனர். பதவி பறிப்புக்கு உண்மையிலேயே என்ன காரணம்?

நகரி
2019-ல் நடந்த எம்எல்ஏ தேர்தலில் நகரி தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்றார் ரோஜா.. முதல்முறை வெற்றி பெற்றபோதே ரோஜா நிறைய அரசியல் கணக்குகளை போட்டிருந்தார்.. ஆனால், எதுவும் நடக்கவில்லை.. அதனால் 2வது முறையாக வெற்றி பெற்றபோது, எப்படியும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என ஆவலுடன் இருந்தார். ஆனால், ரோஜாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது.. .அவரது ஆதரவாளர்கள் அதிருப்திக்கு ஆளானார்கள்.

சமாதானம்
அதனால் ரோஜாவை சமாதானப்படுத்தும் வகையில், மாநிலத்தின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பொறுப்பினை தந்தார் ஜெகன்... இது ரோஜாவுக்கு குஷியை தந்தது.. காரணம், அமைச்சர் பதவிக்கு இணையானதுதான் வாரிய தலைவர் பதவி.. ஆனாலும் ஜெகன், "இந்த பொறுப்பானது இரண்டரை வருஷம் கழித்து திரும்பவும் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்... இந்தமுறை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, அடுத்த முறை வாய்ப்பு வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்.

அமைச்சர் பதவி
இதைக்கேட்டு ரோஜா மீண்டும் சந்தோஷமானார்.. இந்த முறை வாரியம் என்றால் அடுத்த முறை எப்படியும் தனக்கு அமைச்சர் பதவிதான் கிடைக்கும் அளவுக்கு அதிகமான நம்பினார்.. விழுந்து விழுந்து தொகுதியில் வேலை பார்த்தார்.. சுற்றி சுற்றி வந்து கட்சி பணியை செய்தார்.. இது ஜெகனின் நம்பிக்கையை மேலும் கூட்டியது என்றாலும், அதற்கு பிறகு சில ரிப்போர்ட்கள் ரோஜா குறித்து ஜெகனுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.

நடவடிக்கைகள்
இந்த சமயத்தில்தான், ஒருத்தருக்கு ஒரு பதவிதான் இருக்க வேண்டும் என்று ஜெகன் முடிவெடுத்துள்ளார்.. அதாவது, சமீபத்தில் புத்துார் மற்றும் நகரி நகராட்சி தேர்தல்களில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பலரும் களம் இறங்கியதற்கு, ரோஜாவின் நடவடிக்கைகளே காரணம் என்று ஜெகனுக்கு பலரும் ரிப்போர்ட் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ஜெகன் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அமைச்சரவை
அதுமட்டுமல்ல, விரைவில் அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்பட உள்ளது.. தனக்கு அமைச்சர் பதவி கேட்டு ரோஜா இப்போதே நெருக்கடி தர ஆரம்பித்துவிடுவார் என்பதாலும், தேவையில்லாமல் சிக்கலை அதிகப்படுத்த வேண்டாம் என்பதாலும்தான் இந்த நடவடிக்கையை ஜெகன் மேற்கொள்ளப்பட்டதாக சொல்கிறார்கள்.. இதைதவிர ஜெகனின் இந்த முடிவில் வேறு ஏதாவது முக்கியமான காரணம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

குழப்பம்
அதாவது, வாரிய தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டதற்கு காரணமே, ரோஜாவுக்கு அமைச்சர் பதவி தரலாம் என்பதால் இருக்கலாம் என்றும் இன்னொரு காரணத்தை சொல்கிறார்கள்.. இப்போதைக்கு எல்லாருமே குழம்பி போயிருந்தாலும், ரோஜாவின் பதவி எதற்காக பறிக்கப்பட்டது என்பதற்கான விடை தெரிந்துவிடும்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications