நெருப்பில் இறங்க போகும் ரேவந்த் ரெட்டி.. வேற வழியே இல்லை.. தப்புமா தெலுங்கானா காங்கிரஸ்?
ஹைதராபாத்: உச்ச நீதிமன்ற உத்தரவு தெலுங்கானாவில் மிகப் பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இதனால் அங்கு விரைவில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இடைத்தேர்தல் என்பது அங்குள்ள காங்கிரஸ் கட்சிக்கும் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் அக்னிப் பரீட்சையாகவே இருக்கப் போகிறது.
தெலுங்கு மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பு அங்கு மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. அங்கு மாஜி முதல்வர் கேசிஆரின் பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியிலிருந்து கடந்தாண்டு 10 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினர். அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
இருப்பினும், அந்த நடவடிக்கைக்குத் தெலுங்கானா ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த இடைக்காலத் தடையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், தகுதி நீக்க நடவடிக்கை விவகாரத்தில் அடுத்த 3 மாதங்களில் முடிவெடுக்கும்படி தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவர் கடம் பிரசாத் குமாருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தெலங்கானா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாகத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்குத் தனிப்பட்ட முறையில் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அவர் கடந்த மார்ச் மாதம் தான் பிஆர்எஎஸ் உறுப்பினர்கள் கட்சி மாறினாலும் இடைத்தேர்தல் இருக்காது கூறியிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் 10 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஆட்சிக்குப் பிரச்சினை இல்லை
அதேநேரம் இந்த 10 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் கூட அது காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவாக இருக்காது. ஏனென்றால் 119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸுக்கு மட்டும் 64 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிஆர்எஸ் கட்சியைப் பொறுத்தவரை எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவர்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 29ஆகக் குறையும். இது போக பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் ஓவைசியின் மஜலீஸ் கட்சிக்கு 7 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
ஏன் முக்கியம்
அரசியல் ரீதியாகப் பின்னடைவு இல்லை என்றாலும் இது ரேவந்த் ரெட்டியின் இமேஜை சார்ந்து முக்கியமானது. ரேவந்த் ரெட்டிக்கு மட்டுமில்லை காங்கிரஸுக்கும் முக்கியம் எனச் சொல்லலாம். ஏனென்றால் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ஓரிரு மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று. இதனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும்.
அட இடைத்தேர்தல் தானே.. ஆளும் கட்சி தானே ஜெயிக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், தமிழ்நாடு போல இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும் போக்கு மற்ற மாநிலங்களில் இருக்காது. இதனால் இந்த 10 தொகுதிகளிலும் வெல்வது ஒன்றும் அவ்வளவு ஈஸி இல்லை.
எந்த தொகுதிகள்
மேலும், கடந்த 2023 தெலுங்கனா சட்டசபைத் தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சிக்குக் கிராமப்புறங்களிலேயே அதிக சீட்கள் கிடைத்தன. நகர்ப்புறங்கள், குறிப்பாக ஹைதராபாத்தில் காங்கிரஸ் செல்வாக்கு குறைவாகவே இருந்தது. இந்த 10 தொகுதிகளில் இரு தொகுதிகள் 3 தொகுதிகள் (ராஜேந்திர நகர், கைரதாபாத், செரிலிங்கம்பள்ளி) ஹைதராபாத்தை நகரில் இருக்கிறது. மேலும் இரு நகர்ப்புற தொகுதிகள் உள்ளன. இது தவிர ஹைதராபாத்தில் உள்ள மற்றொரு தொகுதியான ஜூப்ளி ஹில்ஸ் எம்எல்ஏ உயிரிழந்த நிலையில், அங்கும் இடைத்தேர்தல் வரும்.
அக்னி பரீட்சை
மொத்தத்தில் 11 தொகுதிகளில் 6 தொகுதிகள் நகர்ப்புறம். இங்குக் காங்கிரஸ் ஈஸியாக வெல்லும் என சொல்ல முடியாது. ரேவந்த் ரெட்டி கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்களும் கூட பெரும்பாலும் ஊராகக் கிராமப்புறங்களைச் சார்ந்தே இருக்கிறது. இதனால் நகர்ப்புறங்களில் பெரிய செல்வாக்கு இல்லை. இதனால் ரேவந்த் ரெட்டிக்கு இக்கட்டான ஒரு இடைத்தேர்தலாகவே இது இருக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
-
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா












Click it and Unblock the Notifications