நூல் நூலாக குக்கரில் வெந்த மனைவி.. டெமோ பார்த்த கணவர்.. அந்த உரல் எதுக்கு தெரியுமா? ஆடிப்போன ஆந்திரா
ஹைதராபாத்: மனைவியை துண்டு துண்டாக்கி குக்கரில் வேகவைத்தது குறித்து, குருமூர்த்தி சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போய் உள்ளனர்.. குடியிருக்கும் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராதான் இந்த வழக்கில் போலீசாருக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி.. 39 வயதாகிறது.. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.. மனைவி பெயர்வெங்கடமாதவி... 35 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குருமூர்த்தி ராணுவ பணியில் இருந்து விலகி ஐதராபாத் கஞ்சன்பார்க் பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகத்தில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.. இதற்காக ரங்காரெட்டி மாவட்டம் சில்லலகூடா பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார்..
துன்புறுத்தல்: சமீபகாலமாகவே மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் வந்துள்ளதால், தினந்தோறும் அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்திருக்கிறார்.. பொங்கல் பண்டிகைக்குகூட பெற்றோர் வீட்டக்கு அவரை, குருமூர்த்தி அனுப்பி வைக்கவில்லை. 16ம் தேதி மகளுக்கு பெற்றோர் போன் செய்தும், எடுக்காததால், குருமூர்த்தியிடம் விசாரித்துள்ளனர்.
"உங்க பொண்ணு யார் கிட்டயோ செல்போனில் பேசிட்டேயிருந்தாள்.. நான் சொல்லியும் திருந்தல. அதனால் யாருடனாவது ஓடிப்போயிருக்கலாம்" என்றாராம்.. இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர், நீர்பேட் போலீஸில் கடந்த 20ம்தேதி புகார் தந்தார்கள்.. இவர்கள் புகார் தந்த அதே நாளில், குருமூர்த்தியும் , தன்னுடைய மனைவியை காணவில்லை, யாருடனோ ஓடிப்போய்விட்டார் என்று புகார் தந்துள்ளார்.
புகார்கள்: இரு தரப்பிலுமே புகார்கள் வந்ததால் குழம்பி போன போலீசார், அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், 16ம் தேதி இரவு, தம்பதியிடையே வாக்குவாதம் நடந்து, பெண்ணின் அழுகுரல் கேட்டதாகவும், அதற்கு பிறகு அந்த பெண் வெளியே வரவில்லை என்றார்கள். அப்போதுதான் குருமூர்த்தி மீது போலீசாருக்கு சந்தேகம் திரும்பியது.
அதே தெருவிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, 17ம்தேதி இரவு குருமூர்த்தி, ஒரு தெருநாயை தன்னுடன் வீட்டுக்கு இழுத்து சென்றது தெரியவந்தது. அதற்கு பிறகு அந்த நாயை காணவில்லை. இதையடுத்தே கிடுக்கிப்பிடிவிசாரணை நடந்தது.
வாக்குமூலம்: குருமூர்த்தி போலீசாரிடம் தந்த வாக்குமூலம் இதுதான்: "மனைவியின் நடத்தை மீது நிறைய சந்தேகம் இருந்தது.. 16ம்தேதியும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்து கத்தியால் மனைவியை வெட்டி கொன்றேன்... பிறகு உடலை துண்டுதுண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்தேன். பிறகு ஹாலிவுட் படங்களையும், யூடியூப்பில் சில வீடியோக்களையும் பார்த்தேன்.
பிறகு, ஒரு நாயை வைத்து சோதனை செய்ய முயற்சித்தேன்.. இதற்காக தெருவில் நடமாடிய நாயை வீட்டுக்கு அழைத்துவந்து அடித்து கொன்று, அதனை உடலை துண்டுகளாக்கி குக்கரில் வேகவைத்து காயவைத்தேன். பிறகு அதை தூள் தூளாக்கி சாக்கடையில் கலக்கிவிட்டேன்.
எலும்புகள்: அதற்கு பிறகுதான், இதே பாணியில், என் மனைவியின் உடல்களை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து குக்கரில் வேகவைத்து, பிறகு காயவைத்து பவுடராக்கி சாக்கடையில் வீசினேன். " என்றார்.. குருமூர்த்தி பேச பேச, ஆந்திரா போலீஸ் அப்படியே அதிர்ச்சியாகி விட்டதாம்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், குருமூர்த்தியை அழைத்துச்சென்று ஏரியில் வீசிய எலும்புகளை கைப்பற்றினார்கள். ஆனால், மற்ற உடல் பாகங்கள் இன்னும் கிடைக்கவில்லை. தேடி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications