அமைதியை நிலைநாட்ட அனைத்தையும் செய்ய தயாராக உள்ளேன்.. ஜமாஅத்துல் தலைவர்களை சந்தித்த ரஜினி டிவிட்!
இன்று ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: இன்று ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு பின் நாடு முழுக்க போர்க்களமாக மாறியுள்ளது. இந்த சட்டத்தை எதிரித்து டெல்லி, வண்ணாரப்பேட்டை தொடங்கி நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சிஏஏ போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் பெரிய சர்ச்சையானது.
அவர் தனது பேட்டியில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன். சிஏஏவின் மூலம் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால், தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை நாட்டிற்கு மிகவும் அவசியம், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார். இது தமிழக இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் இன்று ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்களை இன்று ரஜினி சந்தித்தார். காஜா முயீனுத்தீன் பாகவி, அப்துல் அஜீஸ் பாகவி, இல்யாஸ் ரியாஜி, அன்வர் பாதுஷாஹ், முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, ஆகிய தலைவர்களை இன்று ரஜினி சந்தித்தார்.
அதில் சிஏஏ குறித்து ரஜினியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன். உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று ரஜினி உறுதி அளித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) March 1, 2020
இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது ரஜினி டிவிட் செய்துள்ளார், இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் தரப்பு ஆலோசனைகளை கேட்டு இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும், அமைதியும் ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நான் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications