ஹிஜாப் அணிந்த பெண் அதிகாரியிடம் வெற்றிச்சான்றிதழ் பெற்ற பாஜக கவுன்சிலர்! தென்காசியில் நடந்த ருசிகரம்!
தென்காசி: தென்காசி நகராட்சியில் ஹிஜாப் அணிந்த பெண் தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் தனது வெற்றிச்சான்றிதழை பெற்ற ருசிகர நிகழ்ச்சி நடந்துள்ளது.
தேர்தல் அன்று எந்த ஹிஜாப்பிற்கு எதிராக பாஜக முகவர் ஆர்ப்பாட்டம் செய்து சலசலப்பை ஏற்படுத்தினாரோ, இன்று அதே ஹிஜாப் அணிந்த பெண் அதிகாரியிடம் சத்தமின்றி சான்றிதழை பெற்றுச் சென்றிருக்கிறார் பாஜக கவுன்சிலர்.
இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுமையாக வெளிவந்துவிட்டன. திமுக வெற்றிமுகத்தில் இருக்கும் சூழலில் அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளன. இந்நிலையில் தென்காசி நகராட்சியில் 8-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்னம்மாள் கவுன்சிலராக வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கான வெற்றிச்சான்றிதழை அவர் பெற்ற நிகழ்வு தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிஜாப் எதிர்ப்பு
அதாவது கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு எதிராக அண்மையில் மாணவர்கள் சிலர் செய்த அலப்பறைகளை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மேலூரில் பாஜக முகவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து ஓட்டளிக்க வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்களிக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்ததோடு வாக்குச்சாவடி மையத்திற்குள் பெரும் குரல் எழுப்பி வாக்குவாதமும் செய்தார்.

தென்காசி நகராட்சி
இந்தச் சூழலில் இன்று தென்காசி நகராட்சியில் ஹிஜாப் அணிந்த பெண் தேர்தல் அதிகாரியான ஃபிர்ஜானிடம் சத்தமின்றி வெற்றிச்சான்றிதழை வாங்கிச் சென்றிருக்கிறார் பாஜக கவுன்சிலர் பொன்னம்மாள். அன்று எந்த ஹிஜாப்பை கழற்ற வேண்டும் என பாஜக முகவர் தகராறு செய்தாரோ, இன்று அதே ஹிஜாப் அணி பெண்ணின் கையால் பாஜகவை சேர்ந்தவர் சான்றிதழ் பெற்றிருக்கிறார். இதனைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

தனித்துப் போட்டி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில், தென்காசி, கன்னியாகுமரி, கோவை, மதுரை, உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications