Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியா பண்ணுவீங்க; கொஞ்ச நேரம் ஆடவிட்டிருக்கலாம்.. காலையிலேயே நியூசிலாந்து கதையை முடித்த இந்தியா

India 372-run win against New Zealand, India's biggest margin of victory, இப்படியா பண்ணுவீங்க, கொஞ்ச நேரம் ஆடவிட்டிருக்கலாம், காலையிலேயே நியூசிலாந்து கதையை முடித்த இந்தியா

Subscribe to Oneindia Tamil

இந்தியா இன்று நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் தனது சொந்த மண்ணில் தொடர்ந்து 14 வது சீரிஸ் வெற்றியை பெற்று சாதனையை நோக்கி நகர்கிறது. ஸ்பின்னர்களின் சுழற்பந்து ஜாலத்தால் காலையில் தொடங்கியவுடனேயே நியூசிலாந்து கதையை முடித்துவிட்டனர். இந்த போட்டியில் அஜாஸ் பட்டேல் சாதனை புரிந்தார். இந்தியாவும் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ரன்களில் வென்ற சாதனையை புரிந்துள்ளது.

டி-20 ல் ஒயிட்வாஷ் செய்த இந்தியா

டி-20 ல் ஒயிட்வாஷ் செய்த இந்தியா

நியூசிலாந்து அணி இந்தியாவில் 2 டெஸ்ட் மேட்ச், 3 டி.20 போட்டிகளில் விளையாட வந்தது. இதில் டி.20 யில் 3 டி-20யிலும் இந்தியா வென்றதன் மூலம் ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து டெஸ்ட் மேட்ச் ஆரம்பித்தது. முதல் போட்டி கான்பூரில் நடந்தது. கிட்டத்தட்ட இந்திய ஏ அணி என்று சொல்லும் வகையில் ரஹானே தலைமையில் கோலி, பும்ரா, சமி, ரோஹித் ஷர்மா, ஃபாண்ட் இல்லாமல் விளையாடியது. அறிமுக போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் சதமடித்தார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியின் நுனியை தொட்டது. நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் நிலைத்து நின்று ஆடி டிரா செய்தனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தலைமையேற்ற கோலி

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தலைமையேற்ற கோலி

2 ஆம் போட்டிக்கு கோலி அணிக்கு திரும்பினார், ஜடேஜா கைவிரலில் அடிபட்டு செல்ல அவருக்கு பதில் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். இஷாந்த் சர்மாவுக்கு பதில் சிராஜ் கொண்டு வரப்பட்டார். கோலி அதிசயமாக டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தார். ஓப்பனர்கள் மயங்க் அகர்வால், கில் நிலைத்து நின்று ஆடினர். கில் 44 ரன்களுக்கு அவுட் ஆக அடுத்து வந்த புஜாரா பூஜ்யத்தில் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலியும் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார். அவரது அவுட் சர்ச்சையானது.

அதிரடி காட்டிய இந்தியா- மயங்க் அகர்வாலின் சதம்

அதிரடி காட்டிய இந்தியா- மயங்க் அகர்வாலின் சதம்

தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயரும் 18 ரன்களில் வெளியேற, மயங் அகர்வால் 150 ரன்களுடன் வெளியேறினார். ஸ்பின்னர் அக்சர் படேல் அதிரடியாக அடி 52 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்க்ஸில் 329 ரன்களில் இந்தியா ஆட்டம் இழந்தது. இந்தியாவின் அனைத்து 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து ஸ்பின்னரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜாஸ் படேல் எடுத்து லேக்கர், கும்ப்ளே சாதனை வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

அதிர்ச்சி கொடுத்த சிராஜ், அடக்கி வைத்த அஷ்வின் சுருண்ட நியூசிலாந்து

அதிர்ச்சி கொடுத்த சிராஜ், அடக்கி வைத்த அஷ்வின் சுருண்ட நியூசிலாந்து

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி எடுத்தவுடன் அதிர்ச்சியை சந்தித்தது. இஷாந்த் சர்மாவுக்கு பதில் களம் இறக்கப்பட்ட சிராஜ் அடுத்தடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் சிராஜ் 4 ஓவர் மட்டுமே வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை எடுத்தார். அடுத்து அஷ்வின் தனது பங்கிற்கு அதிரடி காட்டி நியூசிலாந்தை எழுந்திருக்கவிடாமல் செய்தார். அஷ்வின் 8 ஓவர் வீசி 8 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். அக்சர் படேல் 2 விக்கெட், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட் என 62 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருக்கினர். நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக அடித்த குறைந்தப்பட்ச ஸ்கோர் இதுவாகும்.

 ஃபாலோ ஆன் கொடுக்காத கோலி- டி.20 ஆடிய அக்சர் படேல்

ஃபாலோ ஆன் கொடுக்காத கோலி- டி.20 ஆடிய அக்சர் படேல்

263 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்தியா ஃபாலோ ஆனை தவிர்க்க முடியாமல் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுத்து ஆட வைக்காமல் இந்தியா பேட்டிங்கை எடுத்தது. இரண்டாவது இன்னிங்சிலும் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினார்.மயங்க் 62, கில் 47, புஜாரா 47, கோலி 36 , அக்சர் படேல் அதிரடி பட்டேலாக மாறி டெஸ்ட் மேட்சை டி-20 மேட்சாக ஆடி 26 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். அவர் எடுத்த 41 ரன்களில் 4 சிக்சர், 3 பவுண்ட்ரி அடங்கும். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 276/7 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 540 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா. 2 வது இன்னிங்சிலும் ஜாலம் காட்டிய அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டில்யில்

சாதனை நாயகன் அஜாஸ் படேல்

சாதனை நாயகன் அஜாஸ் படேல்

மும்பையில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் முதல் இன்னிங்ஸில் 10 விக்ெகட்டுகளை வீழ்த்தி, சாதனையாளர்கள் பட்டியலில் கும்ப்ளே, ஜிம் லேக்கர் ஆகியோருடன் இணைந்தார். இந்நிலையில் ஒரு டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மேட்சில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை (இயன் போத்தம் 13 விக்கெட்) வீழ்த்திய சாதனையை முறியடித்தார்.

540 இமாலய இலக்கு வைத்த இந்தியா

540 இமாலய இலக்கு வைத்த இந்தியா

540 ரன்கள் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் முதல் நாள் ஆட்டத்தில் அஷ்வினின் சுழற்பந்து வீச்சில் சரிவை சந்தித்தது. அஷ்வினுடன் சேர்ந்து ஜெயந்த் யாதவ், அக்சர் பட்டேல் ஜாலம் கட்ட முதல் நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிந்தது. நியூஸிலாந்து அணியில் ஹென்றி நிகோலஸ் 36 ரன்களுடனும், ரச்சின் ரவிந்திரா 2 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இப்படியா செய்வீர்கள் கொஞ்சம் ஆட விட்டிருக்கலாமே

இப்படியா செய்வீர்கள் கொஞ்சம் ஆட விட்டிருக்கலாமே

இன்று காலை பிட்ச் ஈரப்பதத்துடன் இருந்ததால், அஸ்வின், ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் பந்து நன்றாக எழும்பி, சுழன்றது. இதனால் இருவரின் பந்துவீச்சை சமாளித்து ஆட நியூசிலாந்து வீரர்கள் சிரமப்பட்டனர். ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் 18 ரன்னில் ரவிந்திரா, புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜெயந்த் யாதவ் வீசிய ஜேமிஸன் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் சவுதி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.

அடுத்துவந்த சோமர்வில்லே ஒரு ரன்னில் யாதவ் பந்துவீச்சிலும், நிகோலஸ் 44 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்கள். 162 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 5 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை தழுவியது. ஒருமணி நேரத்தில் அனைத்தையும் முடித்துவிட்டனர் அஷ்வினும், ஜெயந்தும்.

Recommended Video

    Ind vs NZ : India dominate Sundays action, 5 wickets away from series win | Oneindia Tamil
    நியூசிக்கு எதிரான இந்தியாவின் சாதனை

    நியூசிக்கு எதிரான இந்தியாவின் சாதனை

    2-வது இன்னிங்ஸில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளையும், படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொத்தத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இரு அணியிலும் ஸ்பின்னர்களுக்கு ஜாலம் காட்டும் விதத்தில் சிறப்பான ஆட்டமாக இருந்தது எனலாம். இந்த வெற்றி நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அதிகபட்ச ரன்களில் (272) வென்ற சாதனையை பதிவு செய்து சீரிஸையும் வெல்ல வைத்துள்ளது.

    இதன்மூலம் இந்தியா டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு அருகில் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+