கபினி, கேஆர்எஸ்ஸில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. காவிரியில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Recommended Video

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடியை தாண்டியுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடியை தாண்டியுள்ளது. இன்னு சில மணி நேரத்தில் 90 அடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது இதனால் கபினியிலுருந்து 40,416 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 56,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இரண்டும் சேர்த்து காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82.5 அடியாக உள்ளது. வெளியேற்றும் நீரின் அளவு 100 கன அடியாக உள்ளது. 10 மாதத்திற்கு பின் மேட்டூரில் நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது.
விரைவில் மேட்டூர் அணை 90 அடியை எட்டும் என கூறப்படுகிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது . அணையின் நீர் இருப்பு 45.48 டிஎம்சியாக இருக்கிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications