ஒரு சிம் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் Free.. இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்!
ஆந்திரா, தெலுங்கானாவில் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை தொடர்ந்து நிலவி வரும் நிலையில், தெலுங்கானாவின் சிறிய நகரமான தம்மபேட்டாவில் ஒரு புதிய பார்தி ஏர்டெல் மொபைல் சேவை மையம் அறிவித்துள்ள சலுகை இப்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தம்மபேட்டா என்ற கிராமத்தில் சில மொபைல் ரீசார்ஜ் சேவை வழங்கும் கடைகள் இணைந்து புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ரூ.350 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

எரிபொருள் பற்றாக்குறை அச்சம் இருக்கும் வேளையில் இத்தகைய சலுகை மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஈர்த்துள்ளது. வேறு நெட்வொர்க்-ல் இருந்து ஏர்டெல்-க்கு மாறி 350 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் ரீசார்ஜ் சேவை வழங்கும் நபரின் லாபம் பெரிய அளவில் பாதிக்கப்படும், ஆயினும் போட்டியின் காரணமாக இத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஏர்டெல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மோதல் காரணமாக உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானாவில் எரிபொருள் சப்ளை பாதிப்பு இருக்கும் வேளையில் இத்தகைய அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
தெலுங்கானா அரசின் சிவில் சப்ளைத்துறை அதிகாரிகள் எரிபொருள் இருப்பு குறித்து தெளிவாக அறிவித்துள்ளனர். மாநிலத்தில் தினசரி 18,500 கிலோலிட்டர் எரிபொருள் வரத்து உள்ளது. இது சாதாரண பயன்பாட்டு நிலையில் 40 முதல் 45 நாட்கள் வரை பயன்படுத்தும் அளவுக்கு இருப்பு உள்ளது.
எனவே சந்தையில் பற்றாக்குறை எதுவும் இல்லை. இருப்பினும், வதந்திகள் மற்றும் உலகளாவிய செய்திகள் காரணமாக மக்கள் பீதியில் அதிகமாக வாங்கும் நிலை உருவாகியுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளனர். இதேவேளையில் ஆந்திராவில் சுமார் 1500க்கும் அதிகமான பெட்ரோல் பங்க்-கள் எரிபொருள் இல்லாமல் முடங்கியுள்ளதாக தகவல் வெளியானது, ஆனால் ஆந்திர அரசு 450 பெட்ரோல் பங்க்-கள் மட்டுமே மூடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரான் மோதல் காரணமாக ஏற்பட்ட அச்சம், தெலுங்கானா உள்ளிட்ட பல இடங்களில் தற்காலிக தேவை அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ரீசார்ஜ் செய்யும் ஒரு சாதாரண செலவுடன் பெட்ரோலை இணைத்து விற்பனை செய்வது, வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை அச்சம் இருக்கும் சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட இந்த மொபைல் கடை, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தியது உண்மையில் ஸ்மார்ட்டான மூவ். இது வெறும் விற்பனை உத்தி மட்டுமல்ல, மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தை வைத்து பணமாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications