தெலுங்கானாவில் பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 5 பெண்கள், ஒரு ஆண் குழந்தை உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர், 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ராமண்ணாபேட்டையில் 45 பேருடன் சென்ற அரசுப் பேருந்து மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர், பேருந்தில் இருந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.

இது குறித்து கூடுதல் எஸ்.பி. கங்கா ராம் கூறுகையில்,
அரசுப் பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர், லாரி டிரைவர் ஆகியோர் பலியாகியுள்ளனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பலியானவர்களில் 5 பெண்கள், ஒரு ஆண் குழந்தையும் அடக்கம். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது லாரி டிரைவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து. இந்த விபத்தில் பேருந்தின் வலப்பக்கம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது என்றார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications