10 லட்சம் ஓட்டு; மம்தாவின் மருமகன்; மோடியின் புதிய எதிரி? யார் இந்த அபிஷேக்?
மேற்குவங்கம்: மக்களவையில் மோடி அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அபிஷேக் பானர்ஜியின் மீது நாட்டு மக்களின் கவனம் விழுந்துள்ளது. ஆகவே அவரைப் பற்றிய தகவல்களைப் பலரும் இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான அரசு சார்பில் கடந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற போது மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி பேசிய பேச்சு நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

அவர் பேசும் போது, 'இந்த அவையில் 50 ஆண்டுகள் முன்னால் நடந்த எமர்ஜென்சி பற்றி விவாதிக்கும் போது, நேருவைப் பற்றி விவாதிக்கும் போது மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு பற்றி ஏன் விவாதிக்கக் கூடாது?' என்று கேள்வியை முன்வைத்தார்.
வெறும் 36 வயது நிரம்பிய இந்த இளம் அரசியல்வாதி தனது ஆவேசமான மோடி எதிர்ப்பு பேச்சால் இன்று நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறார். ஆனால், மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை இவர் ஒரு நட்சத்திர அரசியல்வாதி. தனது அத்தை மம்தா பானர்ஜி அரசியல் வாரிசாக வலம் வருபவர். சமீபத்தில் கூட அபிஷேக் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மம்தா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு இருந்தார்.
மக்களவையில் 2024 பட்ஜெட் மீதான விவாதத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும், அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே எழுந்த கடுமையான வாக்குவாதம் இவரை இன்று உலகறிய செய்துள்ளது. அபிஷேக் தனது உரையில் திரும்பப் பெறப்பட்ட மூன்று விவசாய சட்டங்கள் குறித்து அவையில் விவாதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். 'விவசாயிகள், விவசாய அமைப்புகள் அல்லது எதிர்க்கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் விவசாய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது ஏன்' என்றார். அவர் பேசப் பேச திரிணாமுல் எம்பிகள் சந்தோஷ கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அப்போது குறிக்கிட்ட சபாநாயகர், "அது பற்றி இந்த அவையில் ஐந்தரை மணி நேரம் விவாதம் நடந்தது" என்று பதிலளித்தார். அதற்கு அபிஷேக், 'பட்ஜெட்டில் பார்வை தெளிவாக இல்லை. நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளைத் திருப்திப்படுத்துவதை இந்த மத்திய பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இரண்டு நபர்களுக்கான பட்ஜெட். அந்த இருவரிடமும் நல்ல நம்பிக்கை பெற்றுள்ளது. ஆகவே இது மக்கள் விரோத பட்ஜெட். இது இரண்டு அரசியல் கட்சிகளுக்கு லஞ்சம் கொடுக்கவும், ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று ஆவேசமாகக் கூறினார்.
திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜியின் குற்றச்சாட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக மறுத்தார். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி அளித்த பல திட்டங்கள் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படவே இல்லை என்பதை எடுத்துரைத்தார். உங்களுக்குத் தைரியம் இருந்தால். இப்போது கேளுங்கள்? என்று அவர் சவால் விடுத்தார். பதிலுக்கு அபிஷேக் பானர்ஜி ஒரு சவாலை விடுத்தார்.
2021 மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு, மத்திய அரசு வங்காளத்திற்கு எவ்வளவு பணம் கொடுத்தது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட நிதி அமைச்சருக்குத் தைரியம் இருக்கிறதா? என்றார். MGNREGA நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும், வங்காளத்தில் PM Awas Yojana திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட லட்சக்கணக்கான வீடுகள் மத்திய நிதிக்காக இப்போது வரை காத்திருப்பதாகவும் திரிணாமுல் எம்.பி. ஒரு புள்ளிவிவரத்தை முன்வைத்தார்.
"இந்த நாட்டின் ஏழை மக்கள் இன்னும் வீடற்ற நிலையில் இருக்கும் போது ரூ.8000 கோடி மதிப்பில் விமானங்களை வாங்கவும், ரூ. 20,000 கோடி மதிப்பில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக அரண்மனை கட்டிடங்கள் கட்டவும் ஒதுக்கப்பட்டுள்ளது"என்றார் பானர்ஜி. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம்பிர்லா அவையில் உறுப்பினராக இல்லாதவர்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கும்படி கூறினார். அதற்கு, "நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த அவையில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் குறித்து நாம் கருத்து தெரிவிக்கக்கூடாது" என்று சபாநாயகர் கூறினார்.
அதற்கு "நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த அவையில் உறுப்பினரா? அவரைப் பற்றி ஏன் கருத்து தெரிவித்தனர்? தயவுசெய்து அவர்களை மன்னிப்பு கேட்கச் செய்யுங்கள்" என்றார். அதற்கு சபாநாயகர், 'நீங்கள் விரும்பினால் தொடரலாம், பதிவிலிருந்து அவரது பெயரை நீக்கி விட்டேன். ஆனால், நீங்கள் எனக்கு உத்தரவு போட முடியாது' என்று பதிலளித்தார்.
இந்நிலையில் யார் இந்த அபிஷேக் பானர்ஜி? என்று பலரும் கூகுளில் தேடத் தொடங்கியுள்ளனர். இவரது அரசியல் வாழ்க்கை 2011 இல் தொடங்கியது. அகில இந்திய திரிணாமுல் இளைஞர் காங்கிரஸின் தலைவராக அவர் ஒளிர்ந்தார். அதன் பிறகு 2013 கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மேற்குவங்கத்தில் உள்ள நவ நாளந்தா உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், ஒரு எம்பிஏ பட்டதாரி.

இவரது மனைவி ருஜிரா தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 2012 ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரை 672.8K பேர் எக்ஸ் தளத்தில் பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் சுமார் 104K பேட் பின் தொடர்கிறார்கள். இவர் 3 பேரைத்தான் பின் தொடர்கிறார்.
நடந்த முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பாஜக 12 தொகுதிகளில் வென்றது. மொத்த உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் திரிணாமுல் சார்பில் டைமண்ட் துறைமுகம் தொகுதியில் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி போட்டியிட்டார். அவர் மொத்தம் 1048230 வாக்குகளைப் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட 710930 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றார். இந்தத் தேர்தலில் திரிணாமுல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி இது.
முதன்முதலாக டைமண்ட் ஹார்பர் தொகுதியில் எம்பியாக 2014இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் 2019இல் இதே தொகுதியில் 320,594 வித்தியாசத்தில் வென்றார். இந்த 2024இல் அந்த வித்தியாசம் 7 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஆக, மூன்று முறை டைமண்ட் ஹார்பர் என்ற கப்பல் துறைமுகத்தில் இவரது வெற்றிக் கொடி கீழே இறங்காமல் பறந்து வருகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications