பஞ்சாயத்து தலைவர் உத்தரவால் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்
பொகாரோ: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரின் உத்தரவின்பேரில் 10 வயது சிறுமி அவரது பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஸ்வாங் குல்குலியா தவ்ரா கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர் கடந்த திங்கட்கிழமை இரவு மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் குடிகாரரை அடித்து வெளியே விரட்டிவிட்டார்.
இதையடுத்து அந்த நபர் போதை தெளிந்ததும் பஞ்சாயத்தை கூட்டி பக்கத்துவீட்டுக்காரர் தன்னை தாக்கியதாக கூறினார். இதை கேட்ட பஞ்சாயத்து தலைவர் போபால் பாசி பக்கத்துவீட்டுக்காரர் தாக்கியதற்காக அவரது 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த குடிகார ஆசாமி பஞ்சாயத்தினர் கண் முன்பே சிறுமியை இழுத்துச் சென்று அருகில் உள்ள புதரில் வைத்து பலாத்காரம் செய்தார்.
அதன் பிறகு ரத்தப்போக்கால் அவதிப்பட்ட சிறுமியை புதரில் இருந்து அவரது தாய் அழைத்து வந்தார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பலாத்காரம் செய்த நபர் மற்றும் போபாலை கைது செய்தனர்.
மேலும் சிறுமியின் சகோதரரும் கைது செய்யப்பட்டார். சிறுமியை பலாத்காரம் செய்தவரின் மனைவி அளித்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அதாவது சிறுமியை சீரழித்தவரின் மனைவியிடம் அவரது சகோதரர் தகாத முறையில் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications