தீபாவளி அன்றும் “பிஸி”யாய் இருந்த தீயணைப்பு வீரர்கள் – 100 பேருக்கும் மேல் காயம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தீபாவளி அன்று இரவு மட்டும் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்துக்களில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளதாகவும், 52க்கும் மேற்பட்ட தீவிபத்துகளும் ஏற்பட்டுள்ளதாகவும் அம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
"79 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் தீக்காயமும், 6 பேர் கண்களிலும் காயம் அடைந்துள்ளனர்.
18 பேர் வெவ்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சாதாரண சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று சவாய் மன் சிங் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.
100 ஐ தாண்டிய எண்ணிக்கை:
மேலும், சிலர் மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மொத்த எண்ணிக்கை இதனால் 100 பேரை நெருங்கியாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 தீவிபத்துகளும் அந்த இரவில் நடந்துள்ளது.
6 பயங்கர தீவிபத்துகள்:
"தீவிபத்துகளில் 6 பயங்கர விபத்துகள் நடைபெற்றுள்ளன. வைசாலி நகர் சாலை, மான்ஸ்ரோவரில் அமைந்துள்ள ஒரு பிளாட், லோகமாண்டியின் ஒரு குடோன், ஒரு ஜவுளிக்கடை ஆகியவை இதில் அடங்கும்" என்று இஸ்வர் ஜாத் என்ற தலைமை தீவிபத்து தடுப்பு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெரிய காயங்கள் இல்லை:
ஆனால், இந்த தீவிபத்துகளால் யாரும் பெருமளவில் காயமடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்:
தீபாவளி பண்டிகை என்பதால் எப்போதும் இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், அதிகப்படியான அளவில் போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுருந்தனர். சாலை பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.
அமைதியான தீபாவளி:
"தீபாவளி பண்டிகை அமைதியாக நடைபெற்ற நிலையிலும், இதுபோன்ற சிறு சிறு தீவிபத்துகள் ஏற்பட்டன. ஆனாலும், பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை" என்று காவல்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் ராய் ஜங்கா தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications