Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹோட்டல் ரூமில் "கை மாறிய" மனைவிகள்.. விழுந்தடித்து ஓடிய உருவம்.. ஓவர் டார்ச்சர்.. ஆக்‌ஷனில் போலீஸ்

மனைவி மாற்றி விளையாடும் விளையாட்டில் ஈடுபட்டு டார்ச்சர் தந்துள்ளார் கணவர்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ஹோட்டலுக்கு மனைவியை அழைத்து சென்றதுடன், அங்கு வேறொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடும்படி டார்ச்சர் செய்த கணவன் மீது அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் நிறைய நடந்து வருகின்றன.. பெண்கள் மீதான குற்ற செயல்கள் குறையவும் இல்லை.

இது தொடர்பானவர்கள் கைது செய்யப்பட்டாலும், மீண்டும் மீண்டும் பெண்கள் சீரழிந்து வருவது, அதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களே காரணமாக இருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.

 ரகசிய உறவு

ரகசிய உறவு

அதேசமயம், இதற்கு முரணாகவும் சில சம்பவங்கள் நடந்து விடுவதுண்டு.. ராஜஸ்தான் மாநிலத்தை எடுத்து கொண்டால் கடந்த மாதம் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது.. அந்த தம்பதிக்கு 2015ல் திருமணம் நடந்துள்ளது.. ஆனால், அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி சண்டையும் போட்டுள்ளனர். இந்நியில், மனைவி ஒரு ஹோட்டலில் போலீஸ்காரருடன் உல்லாசமாக இருப்பதாக கணவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது..

இணக்கம்

இணக்கம்

இதனால் அதிர்ந்து போன கணவர், அந்த ஹோட்டலுக்கு ஓடோடி சென்றார்.. அங்கே பார்த்தால், மனைவியுடன், 3 பேர் நெருக்கமாக இருந்துள்ளதை நேரில் கண்டு உறைந்து நின்றார்.. அந்த 3 பேருமே போலீஸ்காரர்கள்.. ஒருமுறை கணவன் மீது புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு போனாராம் மனைவி.. போன இடத்திலேயே போலீஸ்காரர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. 3 பேருமே ஒரே ஸ்டேஷனில் வேலை பார்ப்பவர்கள்.. இவர்களுடன் ஓட்டலில் ரூமில் தங்கியிருந்தபோதுதான் திடுதிப்பென்று கணவன் நின்றார்..

 எகிறிய மனைவி

எகிறிய மனைவி

இதனால், 3 போலீஸ்காரர்கள், மனைவி என 4 பேருமே எகிறி குதித்து தப்பி உள்ளனர்.. ஆனால், அவர்கள் ஒன்றாக இருந்ததை, அந்த கணவர் வீடியோ எடுத்துவிட்டார். பிறகு நேராக போலீசுக்கு போனார்.. ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தார்.. இறுதியில், சம்பந்தப்பட்ட 3 போலீசார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.. ஆனால், இதற்கெல்லாம் மூல காரணமான அந்த பெண்ணின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இதுவரை தெரியவேயில்லை..!!

 ஹோட்டல் ரூமில்..

ஹோட்டல் ரூமில்..

இதே குஜராத்தில் இதற்கு நேர்மாறான ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.. இங்குள்ள பிகானேர் என்ற ஸ்டார் ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் அம்மர்.. இவர் ஒரு போதைப்பேர்வழி.. அவரது மனைவியை இயற்கைக்கு முரணான முறையில் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தி வந்துள்ளார்... இந்த சித்வதையில் இருந்து மீளமுடியாமல் மனைவி தவித்து வந்தார்.. இந்நிலையில், திடீரென சில நாட்களுக்கு முன்பு மனைவியை, தான் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றிருக்கிறார்..

 ரூமில் மாறிய ஜோடி

ரூமில் மாறிய ஜோடி

அங்கு அவரை போல பலரும் தங்கள் மனைவிகளுடன் வந்திருந்தனர்.. அப்போது மனைவிகளை மாற்றி உறவு கொள்ளும் விளையாட்டை விளையாடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.. இந்த விஷயத்தை மனைவியிடம் கணவன் சொல்ல, சம்மதிக்க முடியாது என மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், மனைவியை அங்கேயே சரமாரியாக தாக்கியுள்ளார்.. அதே ஹோட்டல் ரூமில் 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் சித்திரவதையும் செய்திருக்கிறார்.. பிறகு ஒருவழியாக அங்கிருந்து தப்பிய அந்த பெண், நேராக போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார். நடந்ததையெல்லாம் சொல்லி அழுதுள்ளார்..

 மார்டன் கேர்ள்

மார்டன் கேர்ள்

அப்போதுதான் பாலியல் தொல்லையுடன், 50 லட்சம் வரதட்சணைக் கேட்டு அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.. இந்த பெண் அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவராம்.. அதனால், பார்ப்பதற்கு மாடர்ன் பெண்ணாக இல்லை, கிராமத்து பெண்ணாக இருக்கிறாய் என்று சொல்லி சொல்லியே கடுமையாக தாக்குவாராம்.. இதெல்லாம் புகாரில் எழுதி தந்துள்ளதன் அடிப்படையில், போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.

 ஆபாச வெறி

ஆபாச வெறி

ஆனால், ஆபாசவெறி பிடித்த சில கணவர்கள் இதை ஒரு விளையாட்டாகவே செய்து வருகிறார்கள்.. பணக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களது மனைவிகளை மாற்றி கொள்ளும் நிகழ்வு ஒன்று நம் சென்னையிலும் 2 வருடங்களுக்கு முன்பு நடந்தது.. சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள ஸ்டார் ஹோட்டல், ரிசார்ட்டுகளில் எல்லா பணக்காரர்களும் ஜோடியாக இங்கு கூடுவார்களாம்.. அவர்களது கார் சாவியை குலுக்கலில் போடுவார்கள்.. பிறகு யார் கையில் எந்த கார் சாவி கிடைக்கிறதோ, அந்த ஜோடிகளை மாற்றி கொள்வது.. இப்படி ஒரு ஆபத்தான, அசிங்கமான விளையாட்டு அப்போது அம்பலமாகியது..

அசிங்கங்கள்

அசிங்கங்கள்

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இந்த விநோதம் நடந்தது.. கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சங்கனாச்சேரி போலீசில் புகார் தரவும்தான் இந்த விஷயமே வெளிச்சத்துக்கு வந்தது... "என்னுடைய கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துகிறார்... இதற்கு உடன்படாததால் என்னை கொடுமைப்படுத்துகிறார்... எனது கணவரின் நண்பர்களும், அவர்களின் மனைவியரை இதுபோல மாற்றி கொள்கிறார்கள்... இதற்காக சோஷியல் மீடியாவில் தனியாக குழு அமைத்து செயல்படுகிறார்கள்... அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 1000 தம்பதிகள்

1000 தம்பதிகள்

போலீசார் விசாரணையில் இறங்கியபோதுதான், "கப்பிள் மீட் அப் கேரளா" என்று அதற்கு க்ரூப்பிற்கு பெயர் வைத்து செயல்பட்டுள்ளனர்.. யாருக்கெல்லாம் இன்னொருத்தர் மனைவி தேவையோ, அவர்கள் இந்த குரூப்பில் உறுப்பினராக இணைவார்களாம்.. இப்படி மொத்தம் 1000 தம்பதிகள் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.. கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர் 1000 தம்பதிகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்..

 அசிங்கம் + ஜாலி

அசிங்கம் + ஜாலி

இவர்களை தவிர கல்யாணம் ஆகாதவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இப்படி கல்யாணம் ஆகாதவர்கள், மாற்றான் மனைவியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்றால், அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு பணம் வசூலிக்கப்படுமாம்.. போலீசார் இது தொடர்பானவர்களை அப்போது கைது செய்தாலும், பல்வேறு இடங்களில் இதுபோன்ற அசிங்கங்கள் தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன.

மதுபோதை

மதுபோதை

இந்த பெண் போலீசில் அளித்துள்ள புகாரில், "என்னுடைய கணவர் ஹோட்டல் அறையில் என்னை அடைத்து வைத்தார்.. ஓட்டலுக்குள் நுழையும்போதே என்னுடைய செல்போனையும் பிடிங்கி வைத்துக்கொண்டார்... ரூமில் 2 நாட்கள் அடைத்து வைத்தார்.. அந்த 2 நாட்கள் கழித்து, போதையில் ரூமுக்குள் வந்தார்.. அங்கேயே மது குடிப்பது, போதைப்பொருளை பயன்படுத்துவது, பல பெண்களுடன் உறவில் ஈடுபட்டார்.. இவரை போலவே, அவரது நண்பர்களும் இருந்தனர்.. இப்படி மனைவிகளை மற்றவர்களுடன் மாற்றி, உறவு வைத்துக்கொள்வதை அவர்கள் விளையாட்டாக செய்துவருகிறார்கள்..

அண்ணி

அண்ணி

இதற்கு நான் ஒத்துழைக்காததால் என்னை நாகரீகம் இல்லாதவள் என்று சொல்லியே அதிகமாக தாக்கினார்.. மேலும், என்னிடம் இயல்புக்கு மாறான வகையில் உடலுறவு வைத்துக்கொண்டார்.. வரதட்சணை கேட்டும் என்னை ஏற்கனவே பலமுறை தாக்கி உள்ளார்.. கணவன், மாமியார், அவரது அண்ணி ஆகியோர் 50 லட்சம் வரதட்சணை கேட்டனர்.. கணவரின் நடத்தை குறித்து மாமியார் வீட்டில் பலமுறை சொல்லியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.. அதனால் கணவன் உட்பட மாமியார் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

கணவர் தாக்கியதில், அந்த பெண்ணின் உடம்பெல்லாம் காயங்கள் உள்ளதால், சிகிச்சைக்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. தம்பதிக்குள் தகராற என்று பார்த்தால், மனைவிகளை மாற்றும் விளையாட்டு என்பது வெடித்து கிளம்பி உள்ளது.. இது மிகப்பெரிய நெட் ஒர்க்காக செயல்பட்டு வருகிறதா? அல்லது இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள் எல்லாம் நண்பர்கள்தானா? உடன் வருபவர்களும் அவர்களின் நிஜமான மனைவிகள்தானா? என்ற விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+