ஹரியானா தேர்தலில் 1031 வேட்பாளர்கள் போட்டி! பாஜக, காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் திடீர் வாபஸ்!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் 90 தொகுதிகளில் மொத்தம் 1031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று காங்கிரஸ், பாஜக கட்சிகளின் பல அதிருப்தி வேட்பாளர்கள் திடீரென வாபஸ் பெற்றனர். ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

ஹரியானாவில் 10 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. ஹரியானா பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை இருப்பதாலேயே சில மாதங்களுக்கு முன்னர் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் மாற்றப்பட்டு நயாப் சிங் சைனி முதல்வராக்கப்பட்டார். ஹரியானா பாஜகவில் உட்கட்சி பூசலும் தலைதூக்கிக் கொண்டே இருக்கிறது.
அதேபோல ஹரியானா காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என கருத்து கணிப்புகள் தெரிவித்தாலும் அந்த கட்சியிலும் உட்கட்சி மோதல்கள் வெடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பாஜக, காங்கிரஸ் அல்லாமல் இந்திய தேசிய லோக் தள், ஜேஜேபி, ஆம் ஆத்மி ஆகியவையும் தேர்தலில் களம் காண்கின்றன.
ஹரியானா தேர்தலில் விவசாயிகள் போராட்டம், அக்னிவீர் திட்டம் உள்ளிட்டவை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது கணிப்பு.
இந்த நிலையில் ஹரியானாவில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் வாபஸ் பெற நேற்று கடைசி நாள். பாஜக, காங்கிரஸில் சீட் கிடைக்காத அதிருப்தியில் போட்டி வேட்பாளர்களாக மனுத் தாக்கல் செய்த பலரும் நேற்று வாபஸ் பெற்றனர். இதனையடுத்து ஹரியானாவில் 1031 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
On 18-09-2024 08:18, Mathivanan Maran wrote:
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications