சீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி!!
மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் 105 வயது மூதாட்டி வாக்களித்தார்
ஸ்ரீநகர்: "கல்யாண பொண்ணுக்கு முகத்தில் இன்னும் வெட்கம்கூட முழுமையாக போகவில்லை.. மணக்கோலத்திலேயே பூத்துக்கு வந்த அந்த புதுமண தம்பதி ஓட்டு போட்டு விட்டு சென்றனர்!
இன்று கர்நாடகம், தமிழகம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
அதிலும் ஒருசிலரின் ஆர்வத்தை பார்த்தால் அடேங்கப்பா ரேஞ்சுக்கு உள்ளது. பெங்களூரு ஜெய்நகரில் ஒரு ஜோடி வாக்களிக்க வந்தது.
|
மஞ்சுளா
கணவர் சீனிவாசனுக்கு வயசு 91, மனைவி மஞ்சுளாவுக்கு 84 வயசு! இருவரும் தள்ளாடியபடியே வந்தாலும் தங்கள் ஓட்டினை சரியாக பதிவு செய்து விட்டு திரும்பினர்.
|
மூதாட்டி
இதேபோல, மராத்திய மாநிலத்தில் லாட்டூர் மக்களவை தொகுதியில் 105 வயது மூதாட்டி வாக்களிக்க வந்தார். அவர் பெயர் கவையாய் காம்ப்ளி! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 10 மக்களவை தொகுதியில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஹரங்குல் பத்ரக்சில் உள்ள சாவடிக்கு இவரை வீல் சேரில் உட்கார வைத்து கூட்டி வந்தனர்

ஒத்தை விரல்
அவரது குடும்ப உறுப்பினர்கள். பாட்டிக்கு கண் தெரிகிறதா, இல்லையா என்றுகூட நமக்கு தெரியவில்லை. கண்களை மூடியபடி இருந்தார். ஆனாலும் ஓட்டு போட்ட ஒத்தை விரலை உயர்த்தி காட்டுகிறார்.

முதுமை
இதுபோல தள்ளாமை, முதுமை, வயோதிகம் காரணமாக உடம்பில் ஆயிரத்தெட்டு பிரச்சனை இருந்தாலும், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதில் இந்த மூத்தோர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.
|
வெட்கம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில், ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. ஒரு ஜோடிக்கு இன்று காலைதான் கல்யாணம் ஆகி உள்ளது. கல்யாண பொண்ணும், மாப்பிள்ளையும் தாலி கட்டிய கையோடு ஸாரி.. வாக்கு சீட்டோடு பூத்துக்கு வந்துவிட்டனர். பெண்ணுக்கு ஓட்டு போட்டுவிட்டு திரும்பி போகும்வரை குனிந்த தலை நிமிரவே இல்லை.. வெட்கமும் விட்டு போகவில்லை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications