பயங்கரம்.. சத்தீஸ்கரில் வேன்-லாரி மோதி கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி
சிம்காவில் உள்ள கிலோரா கிராமத்தில் தங்கள் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் அர்ஜுனியில் இருந்து இருந்து சிம்கா மாவட்டத்தை நோக்கி சுற்றுலா வேன் ஒன்று நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. சிம்கா மாவட்டத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேர் அந்த வேனிஸ் சென்று கொண்டிருந்தனர். சிம்காவில் உள்ள கிலோரா கிராமத்தில் தங்கள் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பலோடாபஜார் - படாபரா நெடுஞ்சாலையில் கமாரியா கிராமம் அருகே வந்த போது, எதிரே தறிகெட்டு வேகமாக வந்த லாரி ஒன்று இவர்களின் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications