11 மாதக் குழந்தையைக் கடத்தி 2 மணி நேரம் சீரழித்த கொடூரன்!
டெல்லி: டெல்லி அருகே தூங்கிக் கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து பலாத்காரம் செய்த காமக் கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. அந்த காமக்கொடூரன் விட்டுச் சென்ற செல்போனை வைத்து அவனை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபருக்கு 36 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொத்தனாராக இருந்து வருகிறான். மேற்கு டெல்லியில் விகாஸ்புரியில் 3வது பட்டாலியன் போலீஸ் குடியிருப்பு உள்ளது.

அந்த குடியிருப்புக்கு உள்ளேயே குடிசை போட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்காக தங்கியுள்ளனர். அவர்கள் பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அங்குதான் தனது தாயாரோடு அந்தக் கைக்குழந்தையும் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவுக்கு முன்பாக அந்த குழந்தையை இந்தக் கொடூரன் நைசாக கடத்திச் சென்றான். அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து குழந்தையை பலாயில் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.
இரவு திடீரென தாயாருக்கு முழிப்பு வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடியபோது, குழந்தை அங்குள்ள புதரில் மயக்க நிலையில் கிடந்ததைப் பார்த்து தாயார் துடித்துப் போனார். போலீஸாருக்குத் தகவல் போனது. விகாஸ்புரி போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
குழந்தை கிடந்த இடத்தில் ஒரு செல்போன் கிடந்தது. அதை வைத்து விசாரித்தபோது குடிசைப் பகுதியில் தங்கியிருந்த அந்த கொடூரன் சிக்கினான். அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை அவன் ஒத்துக் கொண்டான். அவன் பீகாரைச் சேர்ந்தவன்.
அந்தக் குழந்தையை கிட்டத்தட்ட 2 மணி நேரம் கொடுமைப்படுத்தியுள்ளான் இந்த கொடூரன் என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்த கொடும் செயலால் குழந்தை மயக்கமடைந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறவே அவன் பயந்து போய் குழந்தையைப் போட்டு விட்டு குடிசைக்குள் போய் படுத்திருக்கிறான்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications