4 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவரின் சகோதரியை நிர்வாணமாக்கிய 11 பெண்களுக்கு 2 ஆண்டு சிறை
மும்பை: மும்பையில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபரின் சகோதரியை நிர்வாணமாக்கிய வழக்கில் 11 பெண்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு மும்பை சவேரி பகுதியில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்து செய்யப்பட்டார். பலாத்காரம் தொடர்பாக ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், கைது செய்யப்பட்ட இளைஞரின் வீட்டை முற்றுகை இட்டனர்.
பின்னர் அந்த வீட்டில் இருந்த கைது செய்யப்பட்ட இளைஞரின் 22 வயது தங்கையை அவர்கள் சரமாரியாகத் தாக்கினார். மேலும், அப்பெண்ணை நிர்வாணமாக்கி வீதியில் இழுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 11 பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 11 பெண்களுக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பெண்களே இது போன்ற கொடிய சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வருந்தத்தக்கது எனவும் பெண்களே இத்தகைய காரியத்தில் ஈடுபட்டாலும், இந்திய தண்டனைச் சட்டம் 354 பிரிவின்படி, மானப்பங்கப்படுத்துதல் பிரிவில் பெண்களையும் தண்டனைக்குள்ளாக்கலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications