மிசோரம்: 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள்! டாப் 1-ல் இடம் பெற்றிருப்பது பாஜக, காங். அல்ல!
ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவரான ஆண்ட்ரூ லால்ரெம்கிமா பச்சோவ் (Andrew Lalremkima Pachuau) ரூ69 கோடி சொத்துகளுடன் டாப் 1- இடம் பிடித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மிசோரம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் சில சுவாரசிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
- மிசோரம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 64.4% பேர்
ரூ1 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்திருக்கின்றனர்.
- ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவரான ஆண்ட்ரூ லால்ரெம்கிமா பச்சோவ், ஐஸ்வால் வடக்கு-III தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ68.93 கோடி.
- செர்ச்சிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வன்லத்லுங்கா ரூ.55.6 கோடி சொத்துகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
- சம்பாய் வடக்கு தொகுதியில் மிசோரம் மக்கள் இயக்க வேட்பாளராக போட்டியிடும் ஜின்ஜாலா ரூ36.9 கோடி சொத்துகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
- செர்ச்சிப் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ரம்ஹுலுன் எடெனாதான் வேட்பாளர்களிலேயே பரம ஏழை. அவரது அசையும் சொத்துகளின் மதிப்பு மொத்தமே ரூ1,500 மட்டுமே.
- லாங்த்லாய் தொகுதி பாஜக வேட்பாளர் ஜேபி ருலசிங்கா தமது வேட்புமனுவில் ரூ90.32 கோடி சொத்து இருப்பதாக தவறுதலாக குறிப்பிடப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறார்.
-2018 சட்டசபை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர் லால்ரிங்க செய்லோ ரூ100 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார். தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ26.24 ஆக குறைந்துவிட்டதாம்.
- மற்றொரு மிசோ தேசிய முன்னணி வேட்பாளர் ரோமவியா ரோவ்தே ரூ44 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரது சொத்து மதிப்பும் ரூ32.24 ஆக குறைந்துவிட்டதாம்.
- மொத்தம் போட்டியிடும் 16 பெண் வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சியின் மெரியம் ஹிராங்சல், ரூ18.36 கோடி சொத்து மதிப்பை காட்டியுள்ளார்.
- மிசோரம் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களில் முதல்வர் ஜோரம்தங்காதான் பணக்காரர். அவரது சொத்து மதிப்பு ரூ5 கோடி.
- ஜோரம் மக்கள் இயக்கத் தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான லால்துஹோமாவின் சொத்து மதிப்பு ரூ4 கோடி.
- மிசோரம் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் லால்சாவ்தாவின் சொத்து மதிப்பு ரூ6 கோடி.
- மிசோரம் மாநில பாஜக தலைவர் வன்லால்ஹுமகாவின் சொத்து மதிப்பு ரூ31.31 லட்சம் மட்டுமே.
- மொத்தம் 174 வேட்பாளர்களில் 5 பேர் மீது மட்டும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் ஜோரம் மக்கள் இயக்கத்தினர் 3 பேர்; மிசோ தேசிய முன்னணி, பாஜக வேட்பாளர்கள் எஞ்சிய இருவர்.
- 174 வேட்பாளர்களில் வயது மூத்தவர் துணை முதல்வரான தன்பூய். இவருக்கு வயது 80.
- சுயேட்சையாக போட்டியிடும் லால்ருவாட்பெலி 2 தொகுதிகளில் களம் காண்கிறார். இவருக்கு வயது 31. பாஜக வேட்பாளர் வன்மிங் தங்கா, லால்ருவாட்பெலி இருவரும்தான் மிகவும் வயது குறைந்த வேட்பாளர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications