118 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் உருகித் தவிக்கும் ஆந்திரா!
ஹைதராபாத் : அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஆந்திராவில் 118 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகம, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சி, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

வெயில் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அனல்காற்று வீசுகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 116 டிகிரி வரை வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத், வாராங்கல், ஐதராபாத், ஹாமம், மகாபூப்நகர், நல்கோல்டா மற்றும் நிசாமாபாத், கரிம்நகர் பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் முதல் முறையாக 108 டிகிரி :
முன்னதாகவே தொடங்கிய கோடையால் அவதிப்பட்ட மக்களை, கடந்த வாரம் பெய்த மழை சற்று குளிர்வித்தது. இந்தாண்டு அக்னி நட்சத்திரத்தை ஒரு வழியாக தாண்டப் போகிறோம் என நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களை கடந்த சில தினங்களாக வாட்டி வதைத்து வருகிறது சூரியன்.
அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சென்னை, வேலூரில் மட்டும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்றுதான் 108 டிகிரியை வெயில் தொட்டுள்ளது. புதுச்சேரி 103, திருச்சி, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் 102, மற்ற இடங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications