சுற்றி வளைத்த பாதுகாப்பு படை.. சத்தீஸ்கரில் என்கவுண்டர்.. மாவோயிஸ்டுகள் 12 பேர் சுட்டுக்கொலை!
ராய்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் சத்தீஸ்கரிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பிடியா கிராமத்தை ஒட்டி மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குறிப்பிட்ட அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொது திடீரென மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை வெடித்தது. துப்பாக்கிச்சண்டை முடிவில், மாவோயிஸ்டுகள் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த தகவலை சத்தீஸ்கர் முதல்வர் விஷ்னு தியோ சாய் தெரிவித்தார். மேலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றிகரமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினருக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார். சத்தீஸ்கரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவோயிஸ்டுகளுக்கு ஏற்பட்ட 3-வது பெரிய அடியாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி கன்கேர் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அதேபோல், ஏப்ரல் 30 ஆம் தேதி நாராயண்பூர் மற்றும் கன்கே மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் பஸ்டர் பிராந்தியத்தில் மட்டும் இந்த ஆண்டில் 103 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications