வருமான வரி சோதனையில் சிக்கப் போகும் 12 தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்!

வருமான வரி சோதனையில் சிக்கப் போகும் 12 தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து மேலும் 12 தமிழக அமைச்சர், அதிமுக எம்.எல்.ஏக்கள் வருமான வரி சோதனையில் சிக்க இருக்கின்றனர்.

ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக ரூ89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

12 more ADMK (Amma) leaders under scanner

இந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய இருக்கிறார். இதனால் ஆர்கே நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனிடையே தமிழக அமைச்சர்கள் மேலும் 12 பேர் வருமான வரி துறையின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரையும் வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவைத் தொடர்ந்து அதிரடியாக அடுத்த வருமான வரி துறை சோதனைகள் அரங்கேற உள்ளது. இதனால் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+