ஆந்திரா வெறிச்செயல்.. பலியான 20 பேரும் தமிழர் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.. !
திருப்பதி: செம்மரம் வெட்டியதாக கூறி ஆந்திரா போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்த தமிழர்கள் 20 பேரும் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரங்களை சிலர் வெட்டியதாக கூறி ஆந்திர போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இவர்கள் அனைவருமே தமிழகத்தின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். முன்னதாக இதுகுறித்து ஆந்திரா மாநில செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. காந்தராவ் கூறுகையில், ஸ்ரீநிவாசமங்களபுரத்தில் 11 பேரும் ஸ்ரீவாரிமெட்டுவில் 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 9 பேர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
இந்த துப்பாக்கி சூட்டில் சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து உள்ளார். எஞ்சிய 7 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
பலியானோரில் 9 பேர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர்கள்; எஞ்சிய மூவர் வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்துள்ள புதூர் நாடு, வேப்பங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் படுகாயமடைந்தவர்கள் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தினர் எனவும் தெரியவந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications