இத்தாலி டூ அமிருதசரஸ்.. 160 விமான பயணிகளில் 125 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!
அமிருதசரஸ்: இத்தாலியிலிருந்து அமிருதரசஸ் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 19,206 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.தினசரி கொரோனா பாசிட்டிவிட்டி ரேட்டானது 6.43 சதவீதமாக உள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,85, 401 பேர் ஆகும். இதுவரை 148.67 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 68.53 கோடி பேருக்கு இதுவரை கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுபோல் ஓமிக்ரானால் இந்தியாவில் இதுவரை 2,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் மகாராஷ்டிராவில் 797 பேரும் டெல்லியில் 465 பேரும், ராஜஸ்தானில் 236 பேரும், கேரளாவில் 234 பேரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ராஜஸ்தானை சேர்ந்த 73 வயது முதியவர் கடந்த வாரம் ஓமிக்ரானால் உயிரிழந்தார்.

கொரோனா, ஓமிக்ரானை தடுக்க விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகருக்கு ஒய்யூ- 661 விமானம் நேற்று மதியம் 1.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இத்தாலி கொரோனா அதிகம் பரவும் ரிஸ்கான நாடுகளில் ஒன்றாகும். அந்த விமானத்தில் 179 பேர் பயணித்தனர்.
அவர்களில் 19 பேர் கைக் குழந்தைகள் என்பதால் மற்ற தகுதியுடைய 160 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இத்தாலியின் மிலான் நகரிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸிற்கு போர்ச்சுகல் நிறுவனமான ஈரோ அட்லாண்டிங் ஏர்வேஸ் விமானம் இயக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications