ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலி
ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 19 பேரில் 13 பேர் நீரில் முழ்கி பரிதாபமாக பலியாயினர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த திருவிழாவில் பங்கேற்க 19 பேர் மீன்பிடி படகில் சென்றனர். இந்த படகு எதிர்பாராதவிதமாக ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் மீட்பு படையினர் 3 பேர் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றியதே விபத்திற்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து விசாரணை நடத்த ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications