மேற்கு வங்கத்தில் சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி - 30 பேர் காயம்
லக்னோ: மேற்கு வங்கத்தில் மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
மேற்கு வங்க மாநிலம் குத்குரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மூன்று பேருந்துகளில் நாதியா மாவட்டம் மாயாபூர் கிராமத்திற்கு சென்றிருந்தனர். பேருந்துகள் பர்த்வான் - காத்வா சாலையில் தேவாந்திகி என்ற கிராமத்தின் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது மூன்று பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்த முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில், நிலை தடுமாறிய பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த கிராம மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் மூன்று பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவினங்களை அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications