ஜார்க்கண்ட் பரிதாபம்- ஆளில்லா ரயில்வே கேட்டினை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதி 13 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
ராம்நகர்: ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் புர்குண்டாவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராம்கர் மாவட்டம், புர்குண்டாவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மோது வேகமாக வந்த ரயில் கார் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

ரயில் மோதிய வேகத்தில் கார் முழுவதுமாக உருக்குலைந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் இறந்தவர்களில் 5 குழந்தைகளும் அடக்கம்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோர விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் கிட்டதட்ட 15,000 ஆளில்லா ரயில்வே கேட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications