சென்னை, பெங்களூர் ஏர்போர்ட்கள் நிலைமை இப்படியா ஆகனும்?
டெல்லி: சென்னை மற்றும் பெங்களூர் விமான நிலையங்கள் ஒரு விஷயத்தில் பின்தங்கிதான் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான நிலவரத்தை ஒப்பிட்டால் இவ்வாண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 14.4% வளர்ச்சியடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்
இதே காலகட்டத்தில், இ-டூரிஸ்ட் விசா திட்டத்தின்கீழ் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 56.2% அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 10.05 லட்சமாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் வரை இது 8.78 லட்சமாக இருந்தது. 2015ல் இக்காலகட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை 8.16 லட்சமாக இருந்தது.

வங்தேசம் அதிகம்
நடப்பாண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டவர்களில் அதிகம் பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். 16.77% பேர் வங்கதேசத்திலிருந்து வந்துள்ளனர். 2வது இடம் அமெரிக்காவுக்கு. 14.77% பேர் வந்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து 9.93% பேர் வந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 4.41%, கனடாவிலிருந்து 4.39%, ஆஸ்திரேலியாவிலிருந்து 3.96%, மலேசியாவிலிருந்து 3.50% பேர் வந்துள்ளனர்.

இலங்கை, சிங்கப்பூர்
ஜெர்மனியிலிருந்து 2.90% பேரும், பிரான்சிலிருந்து 2.51%, இலங்கையிலிருந்து 2.32%, சீனாவிலிருந்து 2.26%, சிங்கப்பூரிலிருந்து 2.04%, ஜப்பானிலிருந்து 2.03% மக்கள் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளனர்.

சென்னை, பெங்களூர்
இதில் டெல்லி ஏர்போர்ட்டுக்குதான் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வந்திறங்குகிறார்கள். 29.76% பேர் தலைநகருக்கு முதலில் சென்றுள்ளனர். 2வது இடம் மும்பை விமான நிலையத்திற்கு. அங்கு 17.20% பேர் சென்றுள்ளனர். 3வது இடம் ஹரிதாஸ்பூர் லேன்ட் செக் போஸ்ட் (இந்தியா-வங்கதேசம் நடுவேயுள்ளது) 8.40 சதவீதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. ஆனால் சென்னை விமான நிலையம் வந்தோர் எண்ணிக்கை 5.78% என்ற அளவில்தான் உள்ளது. அண்டையிலுள்ள மற்றொரு தென் மாநில பெருநகரமான பெங்களூருக்கு 5.44% பேர் வந்துள்ளனர். இரு நகரங்களும் ஏறத்தாழ இந்த விஷயத்தில் ஒரே மாதிரி உள்ளன.

திருச்சி, கொச்சி
கோவா விமான நிலையத்திற்கு 5.37% பேரும், கொல்கத்தாவுக்கு 4.62% பேரும், ஹைதராபாத்திற்கு 3.02% சுற்றுலா பயணிகளும், கொச்சிக்கு 2.88% சுற்றுலா பயணிகளும் செல்கிறார்கள். திருச்சி விமான நிலையத்திற்கு 1.46% வெளிநாட்டு பயணிகள் வந்துள்ளனர். திருவனந்தபுரத்திற்கு 1.28% சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications