For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உபி.யில் பயங்கரம்... 2 பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற 14 இளைஞர்கள்.. வீடியோவை வெளியிட்டு அட்டூழியம்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பெண்களை 14 இளைஞர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

ராம்நகர்: உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பெண்களை 14 இளைஞர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவையும் அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மரங்கள் நிறைந்த ஒரு குறுகிய சாலை வழியாக இரண்டு பெண்கள் நடந்து செல்கின்றனர்.

அவர்களை அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்த சில இளைஞர்கள் பின்தொடர்ந்தனர். பின்னர் பயந்து பயந்து சென்ற அந்த இரு பெண்களின் ஆடைகளை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றனர்.

பெண்களிடம் சில்மிஷம்

பெண்களிடம் சில்மிஷம்

பயத்தில் விட்டுவிடும் படி கூச்சலிட்டு செல்லும் அந்த பெண்களை விடாமல் துரத்தி செல்லும் அந்த இளைஞர்கள் தொடர்ந்து ஆடைகளை கிழித்து அவர்களை தூக்கி சென்றனர். அவர்கள் செய்த சில்மிஷங்களை வீடியோ எடுத்து இணையதளத்திலும் வெளியிட்டுள்ளனர்.

இணையதளத்தில் பரவிய வீடியோ

இணையதளத்தில் பரவிய வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்றிரவு வேகமாக பரவியது. போனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ தெளிவாக இல்லாததால் அந்த இளைஞர்களை அடையாளம் காண முடியவில்லை.

கைது செய்ய கோரிக்கை

கைது செய்ய கோரிக்கை

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2 பெண்களையும் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆன்டி ரேமோ படை

ஆன்டி ரேமோ படை

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றப் பிறகு ஈவ்டீஸிங்கை தடுக்க ஆன்டி ரெமோ படையை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a shocking video that has gone viral, a group of 12-14 men can be seen molesting and teasing two women in Uttar Pradesh's Rampur, while they plead to let them go.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X