"டபுள் ஓட்டு" போடுவதாக கூறி.. 14 தமிழர்களை தடுத்த பாஜகவினர்.. கேரளாவில் பரபரப்பு..!
14 தமிழர்களை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இடுக்கி: கேரளாவில் துக்கம் விசாரிக்கச் சென்ற 14 தமிழர்களை தடுத்த பாஜகவினர், அவர்கள் இரட்டை வாக்கு செலுத்தப் போவதாக கூறி பிரச்சினையை ஏற்படுத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடுக்கி மாவட்டமானது தமிழக எல்லையில் உள்ள கேரளப் பகுதியாகும். இங்கு தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவர்களில் பலருக்கு கேரளாவில் ஓட்டுரிமை உள்ளது. சிலருக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை உள்ளது. தேர்தல் சமயத்தில் இரு பக்கமும் ஓட்டுப் போடுவதும் வழக்கம்தான்.

இந்த நிலையில் இன்று தமிழகத்திலும், கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இரட்டை ஓட்டுப் போட பலர் முயல்வதாக அரசியல் கட்சிகள் குறிப்பாக பாஜகவினர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக கேரள ஹைகோர்ட்டிலும் ஒரு வழக்குப் போட்டு எல்லையை மூட வேண்டும் என்று கோரினர். ஆனால் ஹைகோர்ட் அதை மறுத்து விட்டது.
இந்த நிலையில் இன்று இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை அருகே உள்ள நெடும்கண்டம் என்ற இடத்தில் தமிழகப் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த 14 தமிழர்களை பாஜகவினர் மடக்கினர். அவர்கள் இரட்டை வாக்கு செலுத்தப் போவதாக கூறி புகார் கூறினர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர்.
14 பேரிடமும் விசாரித்தபோது உடும்பன்சோலையில் ஒரு துக்க வீட்டுக்குச் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பாஜகவினர் அதை மறுத்து இவர்கள் இரட்டை வாக்கு செலுத்த செல்வதாகவும், அழியாத மையை அழிக்க உதவும் கெமிக்கல் மற்றும் பஞ்சு இவர்களிடம் இருந்ததாகவும் கூறினர். இதையடுத்து 14 பேரையும் போலீஸார் காவலல் நிலையம் கூட்டிச் சென்று விசாரித்து வருகின்றனர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications