சக மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட அநாகரீகமான புகைப்படம் லீக்.. 14 வயது மாணவி விபரீத முடிவு
குவஹாத்தி: 14 வயது மாணவி தன்னுடன் படித்த மூன்று சக மாணவர்களுடன் தன்னுடைய வீட்டில் உற்சாக நடனம் ஆடியிருக்கிறார். அப்போது மாணவர்களுடன் மாணவி அரைகுறை ஆடை கோலத்தில் அநாகரீகமாக புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை அவர்கள் ஆசிரியரிடம் காண்பித்திருக்கிறார்கள். இதனால் வேதனை அடைந்த மாணவி தூக்கிப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி நுன்மாரியைச் சேந்தவர் 14 வயது மாணவி லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தன்னுடன் படித்த சக மாணவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து தன்னுடைய வீட்டில் எல்லை மீறி உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார். கடந்த அக்டோபர் 24ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் அந்த மாணவர்கள் தாங்கள் லட்சுமீயுடன் எடுத்துக்கொண்ட அரைகுறை ஆடையுடன் கூடிய புகைப்படங்களை ஆசிரியிடம் காண்பித்துள்ளார்கள். இந்த விவகாரம் தெரிய வந்ததால் மாணவி லட்சுமியை ஆசிரியர்கள் வகுப்பறையை விட்டு செல்லுமாறு திட்டி இருக்கிறார். அத்துடன் மாணவ மாணவிகளுக்கு இடையே பேசுவதற்கும் கடும் கட்டுப்பாடு விதித்தனர்.
இந்த சம்பவத்தால் மனம் உடைந்த லட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன் தற்கொலைக்கு காரணம் தன்னுடன் அரைகுறை உடையில் புகைப்படம் எடுத்துக்கொண்ட மூன்று மாணவர்கள் மற்றும் அவமானப்படுத்திய 2 ஆசிரியர்கள் காரணம் என்று கடிதத்தில் லட்சுமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 2 ஆசிரியர்களை கைது செய்து 15 நாட்கள் நீதிமனற காவலில் சிறையில் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications