தானேவில் திருமணத்திற்கு சென்ற இடத்தில் 14 வயது சிறுமி பலாத்காரம்
தானே: தானேவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் 14 வயது பழங்குடியினத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பொம்பே பதா கிராமத்தை சேர்ந்த 14 வயது பழங்குடியினத்து சிறுமி சொன்டாக்கே கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 18ம் தேதி அங்கு சென்றுள்ளார்.

திருமணம் முடிந்த பிறகு அவர் மண்டபத்தில் உள்ள அறை ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மயுர் முக்னே(19) என்பவர் சிறுமியை எழுப்பி அங்கிருந்து வம்படியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என மயுரின் நண்பர்கள் ஹரிஷ் பாம்பே, உதய் பாம்பே ஆகியோர் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
முதலில் இது குறித்து யாரிடமும் கூறாத சிறுமி மறுநாள் காலை துணிவை வரவழைத்துக் கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மயுர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
அந்த 3 பேரும் சிறுமியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications