For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாத்மா காந்தி 145-வது பிறந்த நாள்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி அஞ்சலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திரமோடி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

நம் நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 145-வது பிறந்த நாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தி பிறந்தநாளை நாளையொட்டி காந்தி ஜெயந்தி என்று இந்தியாவிற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

145th Birthday Modi visits Rajghat, the memorial to Mahatma Gandhi

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு காலை 7.30 மணி அளிவில் சென்றார். அங்கு காந்தி நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் சிறிது நேரம் அங்கே அமர்ந்து பின்னர் சென்றார். லால் பகதூர் சாஸ்தரியின் பிறந்த நாளும் இன்றும் என்பதால் அவருக்கும் மரியாதை செலுத்தினார்.

அவரைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட பலரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

காந்தி பிறந்த நாளான இன்று நரேந்திர மோடி இன்று தூய்மை இந்தியா என்ற இயக்கத்தை நாடுமுழுவதும் தொடங்கி வைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PM Modi this morning visited Rajghat, the memorial to Mahatma Gandhi, and asked Indians to help build a nation that fulfils the dream of the father of the nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X