ஹலோ போலீஸ்.. அம்மாவின் "நெற்றிப்பொட்டை" குறி வைத்த 16 வயது மகன்.. பாசமே கிடைக்கலையாம்.. அலறிய ம.பி.
மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுவன், தன்னுடைய அம்மாவை கொன்றுள்ளார்
போபால்: 16 வயது சிறுவன் தன் தாயை கொன்றுவிட்டு, போலீசுக்கு போன் செய்து தகவல் அளித்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் நகரை சேரந்தவர் ரமேஷ் ராஜக்.. இவர் ஒரு பேங்க்கில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள்.
கடந்த திட்கட்கிழமை வழக்கம்போல், ரமேஷ் டியூட்டிக்கு சென்றுவிட்டார்.. அப்போது மகனும், மனைவியும் மட்டும் வீட்டில் இருந்தனர்.. ஏதோ தவறு செய்துவிட்டான் என்பதற்காக, 16 வயது மகனை அவரது அம்மா திட்டியுள்ளார்.

சுருண்ட தாய்
இதனால், ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துவந்து அம்மாவை சுட்டுவிட்டான்.. இதில் அந்த தாய், ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.. துப்பாக்கிக்கான லைசென்ஸை பெற்று, வீட்டில் வைத்திருந்திருக்கிறார் ரமேஷ்.. அந்த துப்பாக்கியை எடுத்து, தாயை சுட்டுவிட்டான் சிறுவன்.. இதற்கு பிறகு, அந்த சிறுவனே போலீசுக்கு போனை போட்டு, தன் அம்மாவை சுட்டுவிட்டேன் என்று தகவல் தந்துள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன போலீசார், விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள்.. அதுவரை பயந்து எங்கும் ஓடிவிடாமல் சிறுவன், அங்கேயே போலீசுக்காக காத்திருந்தார்..

அன்பில்லை
போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்... அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. இதுகுறித்து போலீசார் சிறுவனிடம் விசாரித்தனர்.. அப்போது சிறுவன் சொல்லும்போது, "என் அம்மா என்கிட்ட அடிக்கடி சண்டை போடுறாங்க.. என்னை எப்பவுமே திட்டிக் கொண்டு இருக்கிறார்.. என்மீது அன்பு காட்டுவதே கிடையாது.. காரணமே இல்லாமல் என்னை அடிக்கடி அடிப்பார்.. அதனால்தான், ஆத்திரத்தில் என் அம்மாவை சுட்டுக் கொன்றேன் என்று வாக்குமூலம் தந்திருக்கிறான்..

அம்மா பாசம்
இப்போது போலீசார் சிறுவனிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.. சிறுவனை பற்றி சொல்லும்போது, 16 வயது சிறுவனுக்கு, தன்னுடைய தாய் தன்னிடம் அன்பாக இல்லை என்ற கோபம் நீண்ட நாட்களாக இருந்துள்ளது. தன் அண்ணனிடம் மட்டும் அம்மா பாசம் காட்டுவதாகவும், தன்னிடம் பாசம் காட்டவில்லை என்று அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார்.. இதன் காரணமாக அவருக்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கும் அடிமையாக இருந்த சிறுவன், தன்னுடைய அம்மாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்" என்றனர்.

ரூம் ஃப்ரெஷ்னர்
16 வயது சிறுவன் தாயைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படித்தான், கடந்த ஜுன் மாதமும் உத்தரபிரதேசத்தில், இதுபோலவே ஒரு சம்பவம் நடந்தது.. அந்த சிறுவனுக்கும் 16 வயதுதான்.. எப்போது பார்த்தாலும் இந்த சிறுவன் செல்போனில் வீடியோகேம் விளையாடி கொண்டேயிருப்பாராம்.. இதை அவரது அம்மா கண்டித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால், அம்மாவை சுட்டுக்கொன்றுவிட்டார்.. பிறகு, சடலத்தை 2 நாள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

நெற்றிப்பொட்டு
துர்நாற்றம் வீசாமல் இருக்க, வீடு முழுக்க ரூம் ஃபிரெஷ்னரை பயன்படுத்தியிருக்கிறார்.. அத்துடன், 9 வயது தங்கையையும், இந்த கொலை பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வைத்திருந்த நிலையில், போலீசார் உண்மையை வெளிக்கொண்டு வந்தார்கள்.. இந்த சிறுவனின் அப்பா ஒரு ராணுவ வீரர் என்பது கூடுதல் தகவல் ஆகும்... இது தொடர்பான விசாரணைகளும் நடந்து வரும்நிலையில், இன்னொரு சிறுவனும் தாயை கொன்றுள்ளார்.. தன் அம்மாவின் தலையிலேயே குறி பார்த்து சுட்டாராம்.. மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications