16 வயது தங்கையை தாயாக்கிய காமக்கொடூரன்
சகோதரனே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த பெண் கர்ப்பமடைந்து குழந்தை பிரசவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மொஹாலி: சகோதரனே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமடைந்த 16 வயது சிறுமி பிரசவித்துள்ளார். சகோதரியை பலாத்காரம் செய்ததற்காக அந்த சிறுமியின் அண்ணனனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சண்டீகரில் ஒரு வீட்டின் முன்பு பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் குழந்தை தெருவில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சண்டீகர் போலீஸார் அந்த பெண் குழந்தையை மீட்டு அங்குள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், அடையாளம் தெரியாத நபர் குழந்தையை ஆதரவற்று தனியாக விட்டுச் சென்றார் என்று கருதி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.
இதைத்தொடந்து, அந்த குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணின் வீட்டை அறிந்து விசாரித்துள்ளனர். விசாரணையில் மொஹாலி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவருடைய 17 வயது அண்ணன் ஒரு ஆண்டுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த சம்பவம் நடந்தது அந்த சிறுமியின் தாய்க்கும் தெரிந்துள்ளது. இந்நிலையில்தான் சிறுமிக்கு பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு வருவதற்கு சென்றுள்ளனர். குழந்தைகள் காப்பகம் இருக்கும் இடம் தெரியாததால் ஒரு வீட்டின் முன்பு போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சைல்ட்லைன் இயக்குநர் கர்னல் ரவி பேடி, அவருடைய பணியாளர் ஒருவரை அந்த பெண்ணின் வீட்டுக்கு அனுப்பிவைத்து விசாரித்துள்ளார். அங்கே அந்த பெண் தெருவில் வீட்டின் முன்பு போட்டுவிட்டு வந்த குழந்தைக்கு அப்பா தனது சகோதரன்தான் என்றும் தனது சகோதரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததையும் கூறியுள்ளார். மேலும், அந்த பெண் குழந்தையை மிஷனரி காப்பகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அந்த சிறுமியின் சகோதரன் மீது போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஒரு மைனர் சகோதரன் தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமடைந்து பிரசவமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications