டெல்லியில் பயங்கரம்... 17 வயது சிறுமி சுட்டுக்கொலை... பாய் பிரண்டே சுட்டுக் கொன்றார்...
டெல்லியில் 17 வயது சிறுமி தனது நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி : நஜகார் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார. இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நஜகார் பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி ஒருவர் தனது நண்பர் சுபம் மற்றும் யோகேஷுடன் மதிய உணவுக்காக காரில் வெளியே சென்றார். அங்குள்ள ஹோட்டலில் மதிய உணவை முடித்த 3 பேரும் பின்னர் ரஜோரி கார்டனுக்கு சென்றுள்ளனர்.

மாலை 7 மணியளவில் சிறுமியின் தாயார் போன் செய்து வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு அருகில் சென்றபோது அந்த சிறுமி காரிலிருந்து கீழே இறங்கியுள்ளார்.
அப்போது காரில் இருந்த யோகேஷின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்த மற்றொரு நண்பரான சுபம் அவரை சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த சிறுமி அங்கேயே உயிரழந்தார்.
மகளின் வருகைக்காக காத்திருந்த சிறுமியின் தாய் துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தார். அப்போது தனது மகள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவரை ஆய்வு செய்த அதிகாரிகள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக யோகேஷ் காரில் இருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் துப்பாக்கி மற்றும் காரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சுபத்தை தேடி வருகின்றனர். உயிரிழந்த சிறுமிக்கு யோகேஷ் நேற்றுதான் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications