அரசு இணையதளத்தில் 18 பேரின் பெயர்களை நீக்கியது சட்டத்தை மதிக்காத செயல்... தங்கதமிழ் செல்வன்
அரசு இணையதளத்தில் 18 பேரின் பெயர்களை நீக்கியது சட்டத்தை மதிக்காத செயல் என்று தங்க தமிழ் செல்வன் சாடியுள்ளார்.
கூர்க்: தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 18 எம்.எல்.ஏக்களின் பெயர்களை தமிழக அரசு இணையதளத்தில் இருந்து நீக்கியது சட்டத்தை மதிக்காத செயல் என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தது தொடர்பாக விளக்கம் கேட்டும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்களை கடந்த சில நாள்களுக்கு முன்பு சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
இந்நிலையில் சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதைத் தொடர்ந்து தகுதிநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, 18 தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்தவும், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் தடை விதித்துள்ளார்.

அரசு இணையதளத்தில்...
இந்நிலையில் சபாநாயகரால் சமீபத்தில் தகுதி நீக்கத்திற்கு உள்ளான 18 பேரின் தொகுதிகளும் காலியாக உள்ளதாக திடீரென அரசு இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.

சட்டத்தை மதிக்காதவர்கள்
இணையதளத்தில் 18 பேரின் பெயர்கள் நீக்கம் குறித்து கூர்க்கில் உள்ள தங்க தமிழ் செல்வன் கூறுகையில், சட்டத்தை மதிக்கிறவர்கள் யாரும் அதிகாரத்தில் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆட்சியாளர்களுக்கு துளியும் கிடையாது. தங்களை எப்படி வளப்படுத்திக் கொள்வது என்றே உள்ளார்கள்.

கண்டனம்
தகுதி நீக்க வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ள போது அரசு இணையதளத்தில் இருந்து 18 பேரையும் நீக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. சட்டத்தை மதிக்காதவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

வருங்காலத்தில் நல்ல பதிலடி
தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் கும்பலுக்கு வருங்காலத்தில் மக்கள் நல்ல பதிலடி கொடுப்பார்கள். மக்கள் மன்றத்தில் மட்டும் அல்லாது நீதிமன்றத்திலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications