அதிகாலையில் கோர விபத்து.. 18 பேர் உடல் நசுங்கி பலி! உ.பியில் சோகம்.. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா-லக்னோ எஸ்க்பிரஸ் சாலையில் பால் லாரி ஒன்று நின்றிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணியளவில் அந்த வழியாக வந்த தனியார் சொகுசு பேருந்து லாரி மீது அதிவேகத்துடன் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உத்தரப் பிரதேச போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பேருந்தில் பயணித்தவர்கள் பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விபத்து குறித்து,

"உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ்வில் நடந்த சாலை விபத்து நெஞ்சை பதற வைக்கிறது. இந்த துயரமான நேரத்தில், இந்த பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் நிர்வாகம் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். "உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று x தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த விபத்து குறித்து அகிலேஷ் யாதவ் யோகி ஆதித்யநாத் அரசு மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். "நெடுஞ்சாலையில் பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏன் பால் வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது? சாலையில் நிற்கும் வாகனங்களை கண்காணித்து, அதை அங்கிருந்து அப்புறப்படுத்த சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டிருக்குமே? அது என்ன ஆனது?
நெடுஞ்சாலை போலீசார் ஏன் ரோந்து பணியில் ஈடுபடவில்லை? விபத்து நடந்த பின்னர் மீட்பு பணிக்காக வரும் ஆம்புலன்ஸ்கள் ஏன் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை?" என்று கேள்வி எழுப்பி மாநில அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications