தானே: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் பலாத்காரம் ;துணிக்கடை ஊழியர் தலைமறைவு
தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடிய துணிக்கடை ஊழியரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தானே, கல்யாண் வித்தல்வாடி பகுதியை சேர்ந்தவர் மங்கேஷ் மெத்ரே (வயது25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணின் பெற்றோர் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
இதனால் அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதை தெரிந்து கொண்ட மங்கேஷ் மெத்ரே அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதே போன்று கடந்த மே மாதம் 18-ந் தேதி முதல் இந்த மாதம் 6-ந் தேதி வரையிலும் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தினமும் அந்த பெண்ணை அவர் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த பெண்ணை மங்கேஷ் மெத்ரே மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில், தொல்லை தாங்க முடியாத அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்யாண் கோல்சேவாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுபற்றி அறிந்ததும் மங்கேஷ் மெத்ரே தலைமறைவாகி விட்டார். போலீசார் வழக்குப்பதிவு அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications