சீன எல்லையில் சாலை.. 19 இந்திய தொழிலாளர்கள் மாயம்! 2 வாரமாக நீடிக்கும் மர்மம் -அருணாச்சலில் பரபரப்பு
இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் சீனா எல்லையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 19 இந்திய தொழிலாளர்கள் காணாமல் போயிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே அமைந்துள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் 19 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
தலைநகர் இடாநகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாமின் வட்டம் அருகே கடந்த 2 வாரங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

சீன எல்லையில் சாலை
அசாமை சேர்ந்த 19 தொழிலாளர்கள் அருணாசல பிரதேசம் வந்து சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் காணாமல்போனதாக ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார். BRO எனப்படும் எல்லையோர சாலைகள் அமைப்பு சார்பில் சாலை அமைக்கப்படும் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் முகாம்களில் இருந்து இவர்கள் 19 பேரும் கடந்த ஜூலை 5 ஆம் தேதி வெளியேறியதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார்
அசாம் சென்று குடும்பத்துடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்கு ஒப்பந்ததாரர் அனுமதி வழங்காததால் அவர்கள் அங்கிருந்து சென்றதாக சக தொழிலாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை இணை ஆணையர் நிகே பெங்கியா தெரிவித்துள்ளார்.

சடலம் கண்டெடுப்பு
"அங்குள்ள நதி ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. அதை உறுதிபடுத்துவதற்காக எங்கள் உயரதிகாரிகளை அனுப்பி இருக்கிறோம். காணாமல்போன பகுதி உயர்ந்த மலைகளையும், அடர்ந்த காடுகளையும் கொண்டது. எனவே தேடுதல் வேட்டையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். சீன எல்லையில் உள்ள பின் தங்கிய கிராம பகுதிகளை இணைப்பதற்காக இந்த சாலை அமைக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர் மீது வழக்கு
சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த இடம் டாமின் வட்டத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது." என அவர் கூறி இருக்கிறார். டாமின் பகுதி சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 19 தொழிலாளர்கள் மாயமானது தொடர்பாக அவர்களை அருணாச்சல பிரதேசம் அழைத்து வந்த துணை ஒப்பந்ததாரர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

அசாமிலும் புகார்
மாயமான 19 தொழிலாளர்களும் அசாம் மாநிலத்தின் எல்லை பகுதியான கொக்ராஜ்ஹர் மற்றும் துப்ரியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அசாமின் பிலசிபரா பகுதியை சேர்ந்த 7 தொழிலாளர்களை காணவில்லை என ஜூன் மாதம் அவரது குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். இவர்களை கடந்த மே 30 ஆம் தேதி ரெஜாவுல் இஸ்லாம் என்பவர் இடாநகருக்கு பணிக்காக அழைத்து சென்றதாவும், அதன் பின் தொழிலாளர்கள் தங்களுடன் தொடர்பில் இல்லை என்றும் உறைனர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications