கேரளத்தில் அடங்க மறுக்கும் கொரோனா... இரண்டு பள்ளிகளில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு பாதிப்பு!
மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 அரசுப்பள்ளிகளில் 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மாணவருக்கு கொரோனா ஏற்பட்டு இருந்தது. தற்போது அவர் மூலம் அனைவருக்கும் பாதிப்பு பரவியுள்ளது. இதையடுத்து 2 பள்ளிகளும் மூடப்பட்டன.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து விட்டது. ஆனால் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. அதிலும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 6,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 அரசுப்பள்ளிகளில் 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள , மரஞ்சேரி மேல்நிலைப்பள்ளியின் 150 மாணவர்கள் மற்றும் 34 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. மலப்புரத்தின் பொன்னானியில் உள்ள வன்னேரி மேல்நிலைப் பள்ளியின் 39 மாணவர்களுக்கும், 36 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மாணவருக்கு கொரோனா ஏற்பட்டு இருந்தது. தற்போது அவர் மூலம் அனைவருக்கும் பாதிப்பு பரவியுள்ளது. இதையடுத்து 2 பள்ளிகளும் மூடப்பட்டன. கிருமிநாசினி மூலம் இந்த் பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்ட உள்ளது. மாணவர்களிடம் முககவசங்களின் பயன்பாடு, வெப்ப நிலை பரிசோதனையை கண்டிப்பாக கடைபிடிக்க கண்காணிக்க வேண்டும் என்று பள்ளி அதிகாரிகளிடம், மாவட்ட சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications