வனப் பகுதியில் பதுங்கிய தீவிரவாதிகள்.. ஜம்மு காஷ்மீரில் பயங்கர மோதல்.. 4 இராணுவ வீரர்கள் வீரமரணம்!
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, கடந்த 19ஆம் தேதி ராணுவத்தின் சிறப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அந்தப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உறுதியானதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்து வருகிறது. ரஜோரி பகுதியில் நடைபெற்று வரும் இந்த என்கவுன்டரில் இந்திய ராணுவ வீரர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் ராணுவ வீரர்கள், 2 பேர் அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் தீவிரவாதிகள் காயமடைந்து உள்ளதாகவும், அவர்களை ராணுவத்தின் சுற்றி வளைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிர் பஞ்சால் வனப்பகுதி, கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு படையினருக்கு சவாலாக உள்ளது. பயங்கரவாதிகள் அடர்ந்த காடுகளை பயன்படுத்தி தங்கள் இருப்பிடங்களை மறைத்து பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த வாரம், ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications