பட்ஜெட் 2018: தூய்மை இந்தியா திட்டம் மூலமாக மேலும் 2 கோடி புதிய கழிவறைகள்!
நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி கழிவறைகள் கட்டப்பட்டும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்தார்
Recommended Video

டெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி கழிவறைகள் கட்டப்பட்டும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுகாதார சீர்கேட்டிற்கு பல மாநிலங்களில் கழிவறைகள் இல்லாததே காரணம் என்ற ஆய்வில் வெளியான தகவல் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக தூய்மை இந்தியா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. துாய்மை பாரதம் திட்டத்தின் மூலம் கிராமங்களின் தனி நபர் கழிப்பறை கட்டும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில், கழிவறை இல்லாத வீடுகளில் கழிவறை கட்டிக் கொள்ள அரசு முழு மான்யத்துடன் வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக பட்ஜெட் தாக்கலின் போது பேசிய ஜேட்லி, மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் அமோக வரவேற்பை மக்கள் அளித்ததாக தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டுக்குள் 2 கோடி கழிவறைகளை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை பல கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், விரைவில் கழிவறைகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இதேபோல நடப்பாண்டில் 51 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்றும், அதற்கான பயனாளிகள் தேர்வு விரைவில் தொடங்கும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications