எண்ணை நிறுவன கிட்டங்கியில் வெடிவிபத்து - 2 பேர் பலி, 13 பேர் காயம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள கல்ப் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன வெடிபொருள் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹைதராபாத்தின் குக்கட்பல்லி பகுதியில் கல்ப் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான வெடிப்பொருள் கிட்டங்கி ஒன்று உள்ளது. அங்கு பழைய டெட்டனேட்டர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீ கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கு பரவாமல் போராடித் தடுத்தனர். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் நரசிம்ம ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தில் நடக்கும் 4வது பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications