பெண் வயிற்றில் 2 கிலோ முடி.. குடும்பத்துக்கே தெரியாத ரகசியம்.. அதிர்ந்த மருத்துவர்கள்
பரேலி: மருத்துவத் துறையில் ஏஐ தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஆனால், இப்போதும் மருத்துவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஏராளமான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் 21 வயது பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 2 கிலோ முடி அறுவை சிகிச்சை அகற்றப்பட்டது. அவ்வளவு முடி எப்படி வயிற்றுக்குள் சென்றது என்று தெரிந்து மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துவிட்டனர். மருத்துவத் துறையில் பல வித்தியாசமான பிரச்னைகளை மருத்துவர்கள் எதிர்கொள்வார்கள். அப்படி ஒரு வித்தியாசமான பிரச்னையில் உத்தரப்பிரதேச மருத்துவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம் கர்கைனா பகுதியில் 21 வயது பெண் உள்ளார். அவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதற்காக வீட்டிலேயே கைவைத்தியம் எடுத்துள்ளார். வலி சரியாகவில்லை. அதனால் அருகில் சில தனியார் மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற்றிருக்கிறார். அப்படியும் வயிற்று வலி சரியாகவில்லை.
இதனால் அந்தப் பெண்ணின் குடும்பம் செய்வதறியாமல் தவித்து வந்தனர். கடைசியாக பரேலி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதில் அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதிக்குள் நிறைய முடி இருப்பது தெரியவந்தது.
அதைப் பார்த்த மருத்துவர்களும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் வயிற்றில் உள்ள முடியை அகற்ற முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அந்தப் பெண் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சில அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு வாரத்தில் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு, அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த சுமார் 2 கிலோ முடி அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, அந்தப் பெண்ணுக்கு உளவியல் ஆலோசனையும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு முடி பெண்ணின் வயிற்றுக்குள் எப்படி சென்றது என கேட்டபோது, அவரது குடும்பத்தினருக்கும் அது தெரியவில்லை என்றே சொல்லியுள்ளனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட பெண்ணிடம் கேட்டபோது, அவர் தன்னுடைய முடியை ரகசியமாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார். இப்படி ஒரு வருடம், இரண்டு வருடம் இல்லை. சுமார் 16 வருடங்கள் அவர் தன்னுடைய முடியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சாப்பிட்டு வந்துள்ளார். இதைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் ,இந்தப் பழக்கத்தை நீண்ட காலமாக தொடர்வதால், அதில் இருந்து அவரை வெளியில் கொண்டு வர இன்னும் சில மாதங்களுக்கு அவருக்கு உளவியல் சிகிச்சை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகையில், வயிற்றுப் பகுதியில் அதிகளவு முடி சேர்ந்ததால், அந்தப் பெண்ணால் உணவு கூட சாப்பிட முடியாமல் தவித்துள்ளார். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதால், அவர் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. இது சற்று சவாலான விசயம் தான். மிகவும் அரிதாகத்தான் இப்படிப்பட்ட பிரச்னைகளை பார்க்க முடியும். 5 பேர் அடங்கிய மருத்துவர் குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது. தொடர்ந்து அவரின் உடல் மற்றும் மனநிலையை கண்காணித்து வருகிறோம் என்றனர்.
இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மட்டுமல்லாமல், பெண்ணின் குடும்பத்தினரும் அவரை முறையாக கண்காணித்து இயல்புநிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications